பக்கம்:வைணமும் தமிழும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ உரைவளம்

131


தெள்ளாரும் ஞானத் திருக்குரு கைப்பிரான்
பிள்ளான் எதிராசர் பேரருளால் -உள்ளாரும்
அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்தது
இன்பமிகும் ஆறா யிரம்.[1]

என்று கூறுவர் மணவாளமாமுனிகள். 'ஆறாயிரப்படி' என்பது ‘ஆறாயிரக் கிரந்தங்கள்’ என்னும் அளவினையுடையது என்பது பொருள். ஒற்று ஒழித்து உயிரும் மெய்யுமான முப்பத்திரண்டு எழுத்துகளையுடையது ஒரு கிரந்தம் எனப்படும்.[2] 'படி' என்பது 'அளவு' என்னும் பொருளையுடையதாக இவ்வியாக்கியானம் செய்யப்பட்டதாதலின் 'ஆறாயிரப்படி' என்ற பெயரைப் பெற்றது. இறைவனைப்பற்றி நுவல்கின்ற 'விஷ்ணுபுராணம்' ஆறாயிரம் கிரந்தங்களையுடையது. இதனையொட்டி இறைவனைப்பற்றிக் கூறுகின்ற இத்திருமறைக்கும் அத்தொகையளவிலேயே இவ்வியாக்கியத்தை அருளிச்செய்தார் பிள்ளான்.

2. ஒன்பதினாயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் நஞ்சீயர்.

தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி
நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால் -எஞ்சாத
ஆர்வமுடன் மாறன் மறைப்பொருளை ஆய்துரைத்தது
ஏரொன் பதினா யிரம்.[3]

என்பர் மணவாளமாமுனிகள். பிரம்மசூத்திரத்திற்கு இராமாநுசர் அருளிச் செய்த 'ஸ்ரீபாஷ்யம்’ ஒன்பதாயிரம்


  1. உபதேச ரத்தினமாலை (உர.மா)-41
  2. யாப்பருங்கலக்காரிகை- பாயிர உரை.
  3. உ.ர.மா-42