பக்கம்:வைணமும் தமிழும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

வைணவமும் தமிழும்


வரலாறு இது: இவர் இல்லற வாழ்க்கையினர். ஒருநாள் ஓர் இடத்தில் சேர்ந்து கற்கும் மாணாக்கர்களைக் கான நேர்ந்தது. அவர்களை நோக்கி “நீங்கள் கற்பது என்ன” என்று வினவினார். அவர்களும் இவர் எழுத்துவாசனை அற்றவர் என்பதை அறிந்தவர்களாதலின் 'முசல கிசலயம்'[1] படிப்பதாக மொழிந்தனர். இவரும் அதனையறியாது தம் ஆசிரியரான பெரியவாச்சான்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்தார். பிள்ளையவர்களும் நகைத்து “நீர் கல்வி வாசனையே அறியாதவ ராதலின்”உலக்கை தளிர்க்குமோ? ஆதலின், இதனை நீர் ஏன் கேட்கின்றீர்? உமக்கு இதனால் ஆக வேண்டியதென்ன? என்று எள்ளி நகையாடியுள்ளனர் என்று விளக்கினார். இவரும் பெருநாணம் கொண்டு பிள்ளையவர்களின் திருவடியில் விழுந்து வணங்கி “அடியேனைப் புலவனாகும்படி திருவருள் புரிதல் வேண்டும்” என்று வேண்டினார். பிள்ளையவர்களும் முப்பத்திரண்டு அகவை முதிர்ந்த இவரை மாணாக்கராக ஏற்றுக்கொண்டு அனைத்தையும் கற்பித்தார். இதனால் இவரும் சிறந்த புலவரானார். 'முசலகிஸலயம்' என்ற பெயரில் காவியம் ஒன்றையும் அருளிச் செய்து தம்மை எள்ளி நகையாடிய மாணாக்கர்க்குக் காண்பித்து அவர்களைத் தலை குனிய வைத்தார். பின்னர் வாழ்க்கையை வெறுத்து துறவறத்தை மேற்கொண்டு பிற சமயவாதிகளையெல்லாம் வாதத்தில் வென்று ‘வாதிகேசரி’ என்ற விருதையும் பெற்றார். .

பின்னர் பெரியோர்கள் அருளிச்செய்த வியாக்கியானங்களையெல்லாம் கற்று அவற்றின் சாரமான பொருட் சிறப்புகளையெல்லாம் சுருக்கி, எல்லார்க்கும் எளிதாகவும்


  1. முசலகிசலயம்- உலக்கைக் கொழுந்து, கிசலயம்-தளிர்