பக்கம்:வைணமும் தமிழும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வைணவமும் தமிழும்



4. நாதமுனிகள் : (கி.பி. 823-903) கஜாவதாரம்சம். இவர் காட்டுமன்னார் கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் (தென்ஆர்க்காடு மாவட்டம்) ஈசுவரபட்டர் என்பாருக்குத் திருமகனாக அவதரித்தார். அரங்கநாதர் என்பது இவரது பிள்ளைத் திருநாமம். வேறு திருப்பெயர்கள் : 'அரங்கநாதமுனிகள், நாதப்பிரம்மர், தேவிகள், அரவிந்தப் பாவை, குமாரர். ஈசுவர முனிகள்[1] மாமியார், வங்கிபுரத்து ஆய்ச்சி. ஆசாரியர் நம்மாழ்வார் (ஆழ்வாரை யோகத்தில் கண்டவர்). சீடர்கள் : உய்யக் கொண்டார், குருகைக் காவலப்பன், திருக்கண்ணமங்கையாண்டான், தெய்வநாயக ஆண்டான், நம்பி கருணாகரதாசர், ஏறு திருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலை தேவியாண்டான், உருப்பட்டுர் ஆச்சான் பிள்ளை,சோகத்துரர் ஆழ்வான்' ஆகிய பதின்மர். திருநட்சத்திரம் - ஆனி அனுஷம். அருளிச் செயல்கள்; நியாச தத்துவம், புருஷநிர்ணயம் முதலியன,

5. உய்யக்கொண்டார்: (கி.பி. 826-931) ஐயத்தேனாம்சம். திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் அவதரித்தார். திருநட்சத்திரம் சித்திரையில் கார்த்திகைவேறு திருநாமங்கள் பத்மாட்சர், புண்டரீகாட்சர். தேவிகள், ஆண்டாள், ஆசாரியர் நாதமுனிகள் சீடர்கள்: மணக்கால நம்பிகள், திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்காரதாசர் புண்டரீகதாசர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகப் பெருமாள் நங்கை (நாதமுனிகளின் பேரர்- ஈசுவர முனிவர்களின்


  1. தந்தையாரை அடுத்து இவர் ஆசாரியராக வரவில்லை என்பது நினைக்கத்தக்கது.