பக்கம்:வைணமும் தமிழும்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
145
வைணவ ஆசாரியர்கள்


திருக்குமாரர்) நாதமுனிகளால் தம் திருப்பேரர் யமுனைத் துறைவருக்கு எல்லா இரகசியங்களை உபதேசிக்கவும், ஆழ்வார் தமக்குக் காட்டிக் கொடுத்த பவிஷ்யதாசார்ய விக்கிரகத்தைக் காட்டிக்கொடுத்து, இதையும் தாம் விரும்பிய பொருள் எனக் கூறித் தஞ்சமாகக் காட்டிக் கொடுக்கவும் நியமிக்கப்பட்டார்.

6. மணக்கால் நம்பி: (கி.பி.889-994) குமுதாம்சம் திருச்சி மாவட்டம் இலால்குடிக்கருகிலுள்ள (இது வட்டம்). மணக்கால் என்னும் சிற்றூரில் அவதரித்தார். திருநட்சத்திரம் - மாசிமகம். இவருக்கு இராமமிஸ்ரர் என்ற மற்றொரு திருப்பெயரும் உண்டு. ஆசாரியர் உய்யக்கொண்டார். சீடர்கள்: 'யமுனைத் துறைவர் (ஆளவந்தார்), திருவரங்கப்பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, சொட்டைநம்பி, சிறு புள்குருடையார் பிள்ளை,திருமாலிருஞ் சோலைதாசர், வங்கிபுரத்து ஆய்ச்சி'. ஆசாரியர் பெண்களைதம் முதுகில் சுமந்து சேற்று வழியைக் கடந்தவர். யமுனைத் துறைவருக்கு தூதுளங்கீரை பரிமாறி ஒருநாள் நிறுத்தி அவருக்கு இரகசியங்களை உபதேசித்தவர்.

7. யமுனைத்துறைவர் : (கி.பி.916-1041) இவர் ஆள வந்தார். சிம்மாசநாசம் அம்சம், இவர் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகளின் திருக்குமாரராகிய ஈசுவரமுனிகட்கு திருக்குமரராய் அவதரித்தார். திருத்தாயார், அரங்க நாயகி அம்மை. திருநட்சத்திரம் - ஆடி உத்திராடம். மாபாடியபட்டர் என்பாரை நாடி இலக்கணம் தருக்கம் முதலிய நூல்களைக் கற்றவர். அரசவைப் புலவர் ஆக்கியாழ்வானை வாதில் வென்றவர். வேறு திருப்பெயர்கள்: 'யாமுனாசாரியர், யாமுநேயர்'. திருக்குமாரர்கள் :சொட்டை நம்பி, திருவரங்கப் பெருமாள்