பக்கம்:வைணமும் தமிழும்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
146
வைணவமும் தமிழும்

அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பெரிய திருமலைநம்பி, பின்னை அரசுநம்பி, ஆசாரியர் மணக்கால்நம்பி. சீடர்கள்: ‘பெரிய நம்பி, பெரிய திருமலையாண்டான், திருமோகூரப்பன், மாறனேர் நம்பி, திருக்கச்சிநம்பி, அரசபத்தினி திருவரங்கத்தம்மன், திருவரங்கப் பெருமாளரையர், ஆளவந்தார் ஆழ்வான், வானமாமலை யாண்டான், தெய்வவாரி ஆண்டான், ஈசனாண்டான், சீயராண்டான், திருக்குருகூரப்பன், திருமோகூர் நின்றான்; தெய்வப்பெருமாள், வகுளாபரண சோமாசியார், திருமோகூர்தாசர், திருமாலிருஞ்சோலைதாசர், வடமதுரைப் பிறந்தான், ஆட்கொண்டி அம்மங்கி' ஆக 20 திருநாமங்கள். இவருக்கு உடையவரையும் (இராமாநுசர்) சீடராகச் சொல்வர். இவர்தம் அருளிச் செயல்கள்: ‘சித்தித்திரயம் (ஆகம சித்தி ஸ்ம்வித்சித்தி, மோட்சசித்தி) திரயம் மூன்று, கீதார்த்தசங்கிரகம், ஆகமப்பிரமாண்யம் தோத்திரரத்னம் சதுஸ்லோகி, மகாபுருஷநிர்ணயம்' என்ற ஆறு கிரந்தங்கள் -

'8. பெரியநம்பிகள் : (கி.பி. 997-1102); குமுதாம்சம். திருவரங்கத்தில் அவதரித்தார். திருநட்சத்திரம் - மார்கழி கேட்டை வேறு திருநாமங்கள்; பராங்குசதாசர், மகாபூர்ணர், பூர்வாசாரியர். குமரர் : புண்டரீகாட்சர். குமாரி அத்துழாய் அம்மாள். சீடர்கள் : 'எம்பெருமானார், திருக்கச்சிநம்பி, மலைகுனிய நின்றார். சடகோபதாசர், அணிஅரங்கத்து அமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர்' ஆகிய அறுவர். இவர் எம்பெருமானாரை மதுராந்தகத்தில் கண்டு