பக்கம்:வைணமும் தமிழும்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
153
வைணவ ஆசாரியர்கள்

குமாரர்), பிரம்மதந்திரசுவதந்திர சீயர். திருவாராதனப் பெருமாள் : திருவேங்கடமுடையான், திருப்பாணாழ்வார். ஹயக்ரீவ உபாசகர். இவர் திருவடிகளை ஆச்ரயித்தவர்கள் : கந்தாடை எம்பார், குமாண்டுர் அப்பை, குமாண்டுர் பிள்ளை. இவர் திருவடிச் சம்பந்திகள் : கிடாம்பிப்பிள்ளை, குஞ்சம்பூர் இராமாநுசாசாரியர் துப்புல் அப்பை. அருளிச்செயல்கள். தேசிகப்பிரபந்தம் (தமிழ்ப்பிரபந்தங்களின் திரட்டு) இது தவிர மணிப்பிரவாளநடையில் அமைந்த ஸ்ரீமத்ரகசியதிரயசாரம் மிகுபுகழ் வாய்ந்தது. மற்றும் வடமொழியில் ஸ்தோத்ர கிரந்தங்கள் 28; காவிய கிரந்தங்கள் 4; நாடகக்கிரந்தம் 1; வேதாந்த கிரந்தங்கள் 14 வியாக்கியானகிரந்தங்கள் 8: அநுட்டானகிரந்தங்கள்2; இரகசிய கிரந்தங்கள் 32. இவர் அருளிச் செயல்கள் மொத்தம் 121 கிரந்தங்கள்.

(6)நயினாராச்சான்பிள்ளை: (பிறப்புகி.பி. 1316)வேதாந்த தேசிகரின் திருக்குமாரர். திருநட்சத்திரம் - ஆவணி-ரோகிணி. ஆசாரியர், தந்தையார் வேதாந்த தேசிகர். திருநாமங்கள்; குமார வேதாந்தாசாரியர், குமார வரதாசாரியர். சீடர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன். இவரும் தந்தையைப்போல் வாதத்தில் வல்லவர். திருவடி சம்பந்திகள் : எம்பெருமானாரப்பன், குமாண்டுர் ஆச்சான், பேராளிப்பாக்கம் நயனார். அருளிச் செயல்கள்: 'பிள்ளை அந்தாதி, இது தவிர அதிரவச நீயகண்டம், விரோதி பரிகாரம் ஆசாரிய மங்களம்' முதலியன.

இவருடன் வடகலை ஆசாரியர் பரம்பரை முற்றுப் பெறுகின்றது.