பக்கம்:வைணமும் தமிழும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வைணவமும் தமிழும்


வேதாந்தி என்று முதலில் திருநாமம் பெற்றிருக்கையில் வாதபிட்சைக்கு வந்த பட்டரிடம் வாதிட்டுத் தோற்றவர். பின்னர் பட்டரின் திருவடிச் சம்பந்தம் பெற்று அவருடைய சீடரானார். ஒரு நாள் பிச்சைக்கு வந்த வைணவருக்குப் பிச்சையிட மறுத்த தேவியாரை வெறுத்துத் திரவியத்தைப் பகுத்து தேவியாருக்கு அளித்து, குருதட்சினை கொண்டு சந்நியாச ஆசிரமத்தை ஏற்றார். தம் ஆசாரியரைக் காணச் செல்லுகையில் பட்டர் நம்சீயர் வந்தார் என்று கூற அன்று முதல் நஞ்சீயர் என்ற பெயர் உண்டாயிற்று. இவருக்குச் 'ஸ்ரீராங்கநாதர்’, வேதாந்த வேதியர் மாதவாசார்யிர் என்ற வேறு திருநாமங்களும் உண்டு. சீடர்கள்; நம்பிள்ளை யூனிசேனாபதிசீயர், குட்டிக்குறி இளையாழ்வார். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்: திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி, திருப்பாவைக்கு ‘ஈராயிரப்படி' திருவந்தாதிகள், கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பல்லாண்டு இவற்றிற்க்கு உரை. இவர் திருவாய்மொழியை நூறு உரு வியாக்கியானம் செய்தபடியால் திருவாய்மொழிக்குச் சதாபிஷேகம் பண்ணினர் என்ற புகழ் இவருக்கு உண்டு. பெற்றி என்பார் இவருக்கு அடிமைப்பட்டுச் சிறப்பான பொருளைக் கேட்டார். வயது 100,

(4).நம்பிள்ளை: (பிறப்பு:கிபி.1471252); இவர் காவிரியின் தென்கரையிலுள்ள நம்பூரில் அவதரித்தார். இவருடைய பிள்ளைத் திருநாமம் 'வரதராசர்' என்பது. திருநட்சத்திரம் கார்த்திகையில் கார்த்திகை நஞ்சீயரால் நம்பிள்ளை எனத் திருநாமம் பெற்றவர். வேறு திருநாமங்கள் : 'கலி வைரி, திருக்கலிகன்றிதாசர், லோகாசார்யர், பூர் சூக்தி சாகரர், உலகாரியன், அபயப்பிரதாசர். இவர் காலத்தவர் அப்பிள்ளை,