பக்கம்:வைணமும் தமிழும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

வைணவமும் தமிழும்


ஸ்ரீரங்கநாச்சியார். திருக்குமாரர்கள் : பிள்ளை உலக ஆசிரியர், (பாட்டன் பெயரை வைத்தனர் போலும்), அழகிய மணவாளப்பெருமாள் நாயனார். சீடர்கள் : தம் குமாரர்கள் இருவரும், ஈயுண்ணிமாதவர், பத்மநாமப் பெருமாள், பராங்குச சீயர், நாயனார் கூரகுலோத்தும் தாசர், வங்கிபுரம் சிரங்காசாரியர் வானமாமலை தாசர், அருளிச் செயல்கள்: திருவாய்மொழிக்கு ஈடு முப்பதாறாயிரப் படி (நம்பிள்ளை அருளியவற்றை மனத்திலிருந்து எழுதியவர்). வயது 97

(6). பிள்ளை உலகஆசிரியர்: (பிறப்பு. கி.பி. 1300); தேவப்பெருமாள் அம்சம். திருவரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், சீரங்க நாச்சியாருக்கும் திருக்குமாரராக அவதரித்தவர். திருநட்சத்திரம்: ஐப்பசி திருவோணம், திருநாமம், உலக ஆசிரியர். துருக்கர் காலத்தில் பெருமாள் நாச்சியாருடன் வெளியேறிய பொழுது அவர் பிரிவற்றாது தாமும் முதலிகளுடன் புறப்பட்டு 'சோதிடக்குடி' என்னும் சிற்றூரில் பெருமாளுடைய எல்லாச் சொத்துகளையும் கள்வர் அபகரித்ததைக் கேட்டுத் தாமும் தம்முடைய அனைத்தையும் பறிகொடுத்தார். சாதிவேறுபாடின்றி,பேதையரும் பெண்களும் உய்யக்கருதி அரிய பெரிய பதினெண்கிரந்தங்களை (அஷ்டதசா இரகசியங்களை; அஷ்டம்-எட்டு தசா-பத்து)வெளியிட்ட ஆசார்யர்களில் இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இலர். இவை தவிர, 'தத்துவ விவேகம், நாலுவார்த்தை’ என்பவையும் இவர்தம் அருளிச் செயல்கள். இவர் கருத்தைப் பின்பற்றி மணவாள மாமுனிகள் வரைந்த வியாக்கியானத்தின் பொருளமைப்பும், நடையழகும் ஒருவராலும் அளவிடக்கூடியதல்ல. இவருடைய திருவடிசம்பந்தம் பெற்றவர்கள்: திருவாய்மொழிப்