பக்கம்:வைணமும் தமிழும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ ஆசாரியர்கள்

159


பிள்ளை, வங்கிபுரம் சீரங்காசாரியர், கோட்டுரிலண்ணன், விளாஞ்சோலைப்பிள்ளை, வாதிகேசரி அழகிய மணவாளசீயர், கிடாம்பி இராமாதுசப்பிள்ளான், மணப்பாகத்தது நம்பி, சடகோப சீயர், நாலூர்பிள்ளையாச்சான் பிள்ளை, திருப்புட்குழி சீயர், நாலூர்பிள்ளை தாசர், கூரகுலோத்துமதாசர், திருவாய்மொழிப் பிள்ளை, தமப்பனாரண்ணர், திருவாய்மொழிப் பிள்ளை, திருத்தாயார், கொல்லிகாவல்தாசர், கோட்டுர் அழகிய மணவாளப்பிள்ளை, திகழக்கிடந்தாரண்ணன் ஈயுண்ணி அழகிய பெருமாள் நாயனார் ஆகியோர். வயது 105.

(7).திருவாய்மொழிப்பிள்ளை :(பிறப்பு:கிபி.1380), குந்தீ நகரத்தில் அவதரித்தார். இவர் தாய், பிள்ளை லோகாசாரியர் கோயிலை விட்டு வெளியேறியதனால், அதனைத் தரியாது. உயிர்விட, சிறிய தாயாரிடம் வளர்ந்தனர். திருநாமங்கள்: திருமலையாழ்வான், ஸ்ரீசைலேசர், சடகோபதாசர், காட்டு வெட்டிஐயன் ஆழ்வார் திருநகரில் நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்வித்து சதுர்வேதிமங்கலம் என்னும் ஒர் ஊரை உண்டாக்கி உடையவருக்கு ஒரு கோயிலையும் கட்டிவைத்தார். திருவனந்தபுரத்தில் விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்து இரகசிய விசேடங்களைக் கேட்டு திருவாய்மொழியில் வல்லவராய் திருவாய்மொழிப்பிள்ளை என்ற திருநாமம் பெற்றார். ஆசாரியர்:பிள்ளை உலகஆசிரியர் சீடர்கள்:மணவாள மாமுனிகள், சடகோபசீயர் எம்பெருமானார் சீயர். வயது105

(8). மணவாள மாமுனிகள் : (பிறப்பு. கி.பி. 1371-1443); சேஷாம்சம். திருநட்சத்திரம்: ஐப்பசி-மூலம், பாண்டிநாட்டில் சிக்கில் கிடாரம் என்ற சிற்றூரில்அவதரித்தார்(திருக்குருகூரில் அவதரித்ததாகவும் கொள்வர் சிலர்). திருத்தந்தையார்