பக்கம்:வைணமும் தமிழும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

வைணவமும் தமிழும்


திகழக்கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாசரண்ணர்; திருத்தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். பார்பனமரபினர் அழகிய மணவாளன் என்பது இவர் இயற்பெயர். வேறு திருநாமங்கள்; ‘யதீந்திரப்பிரவனர், திருமலை தந்த பெருமாள், முப்பத்தாறாயிரப் பெருக்கர், செளமிய ஜாமாத்ரு யோகிந்தரர், காந்தேபாயந்தர், வரவரமுனி, வரயோகி, இராமாதுசன் பொன்னடி, ருசிர ஜாமாத்ருயோகீந்தரர், அழகிய மணவாளசீயர், பெரியசியர், துப்பில் குலமுடையார்தாசர், சடகோபசீயர் திருக்குமாரர், சீயர் நாயனார் (இராமாதுசய்யன்). ஆசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை தாம் திருக்குருக்ரில் இராமாநுசருக்கு எடுப்பித்த குன்றம் அனைய திருக்கோயிலின் நிர்வாகத்தையும் தம் சீடராகிய இவரிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் வடமொழி கிரந்தங்களில் பலகாலும் கண் வையாமல், ஶ்ரீபாஷ்யத்தை ஒருகால் கேட்டு, தமக்கும் எம்பெருமானார்க்கும் பிரியமான திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களை நாடோறும் ஒதிக்கொண்டு தென்னரங்கர் செல்வமுற்று அத்திருத்தலத்து மாறன் உரை செய்த தமிழ் மறையை வளர்த்து, இந்தலீலாவிபூதியை நித்திய விபூதியாக்கிக்கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலில் நித்திய வாசம் செய்யும்படி பணித்தார். ஆசாரியரின் ஆணையை அவ்வண்ணமே நிறைவேற்றினார் அருமைச் சீடர்.

பெரிய பெருமாள் ஆணைப்படி கோயிலின் பெரிய திருமண்டபத்தில் ஆழ்வாருடைய திருவாய்மொழிப்பொருளை ஈடு முப்பத்தாறாயிரப்படியுடன் ஒராண்டு முழுதும் காலட்சேபம் செய்து 'முப்பத்தாறாயிரப்பெருக்கர்' என்ற விருதையும் பெற்றார். சீடர்கள்: 'வானமாமலை இராமாநுச சீயர்,