பக்கம்:வைணமும் தமிழும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ ஆசாரியர்கள்

161


அப்பிள்ளை, அப்பிள்ளான், நம்மையதிராச ராமாநுசன், அழகிய மணவாளன் (நம்பெருமாள்), சிங்கரயர், கோயில் கந்தாடையண்ணன், பரவஸ்து பட்டர்பிரான் சீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், வண்சடகோப சீயர் என்கின்ற திருவேங்கட சீயர், எறும்பியப்பா, மகாராஜாக்களும் சாத்தின சாத்தாத ஶ்ரீவைணவர்கட்குக் கணக்கில்லை.

இவர் திருவடிசம்பந்திவேட்டுர் சிங்கராசாரியார், மதுரை மகாபலிராயனுக்கு இரகசியங்களை உபதேசித்து முத்தரசு என்னும் கிராமம் பெற்று, அதற்கு அழகிய மணவாளபுரம் என்று பெயரிட்டார். இவர் இருந்தவிடத்தைச் சிலர் தீயிட்டுக் கொளுத்தி விட, இவர் பாம்புருக் கொண்டு வெளிவந்ததாக ஒரு வரலாறும் உண்டு. ஆசாரியருக்குத் தமது உண்மை உருவமான சேஷாவதாரத்தைக் காட்டியதாக மற்றொரு வரலாறும் உண்டு. சடகோபக்கொற்றி என்னும் ஒர் அம்மையார் பெரிய சீயர் திருக்காப்புச் சோத்துக் கொண்டு தனியான ஓரிடத்தில் பகவதநுபவத்தில் இருக்கும்போது கதவின்புரையில் இவரைத் திருவனந்தாழ்வானாகக் கண்டதாக இன்னொரு வரலாறும் உண்டு.

மகாபலி வாணராயன் என்னும் அரசன் ஒருநாள் இரவில் பெரிய சீயருக்குத் தெரியாமல் அவருக்குச் சீபாதம் தாங்கிக் கொண்டுசென்றான். மறுநாள் சீயர் இதனை அறிந்து ஆச்சரியப்பட்டருளினார். இவர் நியமித்த அஷ்டதிக் கஜங்களாகிய 'வானமாமலை சீயர், பட்டர்பிரான் சீயர், திருவேங்கட சீயர், கோயில் கந்தாடையண்ணன், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், எறும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளான்' ஆகியோர் இவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்கள். கோயில் கந்தாடையண்ணன்,