பக்கம்:வைணமும் தமிழும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

வைணவமும் தமிழும்


உடையவருக்கு முதலியாண்டானைப் போலே இவருக்குப் பாதுகாவலராயிருப்பவர். எறும்பியப்பா வடுக நம்பியைப் போலே தேவுமற்றியாத அளவுக்கு மீறிய அன்பாயிருப்பவர். பிரதிவாதிபயங்கரம் அண்ணன் ஆழ்வானைப்போலே உசாத் துணையாயிருப்பவர். அப்பிள்ளார் மடத்தில் எல்லா நிகழ்ச்சி கட்கும் பொறுப்பாயிருப்பவர். வானமாமலை சீயர் பிரியாது அடிமை செய்பவர். பட்டர் பிரான் சீயர் எம்பாரைப் போலே பாதச்சாயாப்பன்னராயிருப்பவர். இறுதிக் காலத்தில் ஸ்ரீசடகோபர் சீயர் மூலம் இவர்துறவறத்தை (துரியாசிரமத்தை) மேற்கொண்டு அழகிய மாமுனிகள் என்ற திருப்பெயருடன் திகழ்ந்தார்.

அருளிச் செயல்கள்: தத்துவத்திரயம், இரகசியத்திரயம், பூர்வசனபூஷணம், ஆசாரிய ஹிருதயம், ஞானசாரம், பிரமேயசாரம், சப்தகாதை, ஏழு பாட்டு, பெரியாழ்வார் திருமொழி (401 பாசுரங்கள்), இராமாதுச நூற்றந்தாதி ஆகிய பத்து பிரபந்தங்கட்கு வியாக்கியானம் இட்டருளினார். திருவாய்மொழி, நூற்றந்தாதி, உபதேசரத்னமாலை, ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு, தத்துவத் திரயத்திற்குப் பிரமானத்திரட்டு, பூர்வசனபூஷணபிரமாணத்திரட்டு, ஆர்த்திப்பிரபந்தம், தேவ ராசமங்களம், எதிராச விம்சதி, திருவாராதானக் கிரமம், இயல் சாத்து முதலியன. மேலும் அவ்வப்பொழுது பாடிய தனிப்பாடல்களும், விடுதிச் சுலோகங்களும் உண்டு. இவர் வாழ்ந்த காலம் 74 ஆண்டுகள். -

இவருடன் தென்கலை ஆசாரியர்கள் வரலாறு முற்றுப் பெறுகின்றது.