பக்கம்:வைணமும் தமிழும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. வைணவ சீலர்கள்

உடையவர் காலத்திற்கு முன்னும் பின்னுமாக இருந்த ஆசாரியர்களைப்பற்றி வைணவ ஆசாரியர்கள் என்ற தலைப்பில் சொல்லப்பட்டவர்கள் போக உடையவர் காலத்திலிருந்த ஆசாரியர்கள், அடியவர்கள் பற்றிய குறிப்புகள் ஈண்டுத் தரப்பெறுகின்றன.

1. ஆசாரியர்கள் :

(1). திருக்கச்சி நம்பி : சுப்ரதிஷ்டாம்சம். இவர் சென்னைக்குச் சுமார் 24 கி.மீட்டர் தொலைவிலுள்ள பூவிருந்தவல்லியில் பிறந்தவர். தந்தையார் வீரராகவன் என்ற வணிகர்; தாயார் கமலை. தொடக்கக் காலத்தில் கச்சி அருளாளனுக்குப் பூத்தொண்டு புரிந்து வந்தார். பின்னர் அப்பெருமானுக்கு ஆலவட்டக் கைங்கரியம் புரிந்து வந்தவர். உடையவர் இளமைக் காலத்தில் அவருடைய திருத்தாயார் சொற்படி இவருடன் நெருங்கிப் பழகி வந்தார்; அவருக்குத் தொண்டும் புரிந்து வந்தார். திருக்கச்சி நம்பி உடையவருக்கு வரதராசப்பெருமாள் திருவுள்ளமாக வெளியிட்ட ஆறு வார்த்தைகள் மிகுபுகழ் பெற்றவை. அவை: (1) திருமாலே பரம்பொருள், (2) சீவான்மாவுக்கும் - பரமான்மாவுக்கும் உள்ள வேறுபாடுபற்றியது (3) பிரபத்தியே (சரணாகதி) சிறந்த முத்தி நெறி (4) மரணகாலத்தில் உள்ளத்தை இறைவனிடம் ஒருமைப் படுத்தவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. (5) சரீரத்தின் முடிவில் பாகவதர்கட்கு முக்தி நிச்சயம் (6) பெரிய நம்பியைக்