பக்கம்:வைணமும் தமிழும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சீலர்கள்

165


குருவாகக் கொள்ளவேண்டும். இந்த ஆறு வார்த்தைகளையும் நம்பி சொல்ல இராமாநுசர் இறைவனே நம்பியின் இதயத்திலிருந்து வந்தவை போன்ற உணர்ச்சியுடன் கேட்டார். இதனால் ஒரு முறையில் ஆசாரியருமாகின்றார் என்று கொள்வதில் தவறு இல்லை. இவர் 55 திருநட்சத்திரம் வாழ்ந்திருந்தார்.பூவிருந்தவல்லி திருமால் திருக்கோயிலில் இவருக்குப் பெருமாள் சந்நிதிபோல் சிறப்புடன் அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் அருகில் உள்ளன. அருளிச்செயல்; 'தேவராஜஷ்டகம்'.

(2). பெரிய திருமலைநம்பி: சுகுமாம்சம். திருமலையில் சித்திரையில் சுவாதி நட்சத்தில் அவதரித்தார். இவரை ‘ஸ்ரீசைலபூர்ணர்' என்று வழங்குவதும் உண்டு. இவருக்கு இரண்டு சகோதரிகள். மூத்தவள் காந்திமதி (இராமாநுசரின் திருத்தாயார்). இளையவள் ஸ்ரீதேவி( எம்பாரின்திருத்தாயார்) காந்திமதியின் குழந்தைக்குத் தாய் மாமன் திருமலை நம்பி இலட்சுமணன் (இளையாழ்வார்) என்ற திருநாமம் இட்டு வழங்கினார். இராமனுக்குப் பணி புரிந்ததைப்போல், ஆதிசேடனைப்போல்,இளையாழ்வாரும்பணிபுரியவேண்டும், பேரறிவுள்ளவனாகவும் திகழ வேண்டும் என்பது மாதுலரின் ஆசை. இவரிடம் இளையாழ்வார் இராமாயணம் கேட்டதாக வரலாறு. இவர் ஆளவந்தாரின் திருவடிச் சம்பந்தி, வயது 100.

(3). திருக்கோட்டியூர் நம்பி: (கோஷ்டிபூர்ணர்); புண்டரீகாம்சம். திருக்கோட்டியூரில்1 அவதரித்தார். திருநட்சத்திரம் வைகாசி உரோகிணி, வேறு திருநாமம்:


1. காரைக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் உள்ள திருப்பத்துரிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் 3 கி. மீ. தொலைவில் உள்ளது.