பக்கம்:வைணமும் தமிழும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வைணவமும் தமிழும்


கோஷ்டிபுரீசர். குமாரர்: தெற்காழ்வான்; குமாரத்தி: தேவகி பிராட்டியார், சீடர்: இராமாநுசர். இராமாதுசருக்கு திருமந்திரம் உபதேசித்தார். சொல்லற்கரிய சிரமம் கொடுத்து உபதேசித்த வரலாறு கல்நெஞ்சத்தையும் உருக்கும். திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்குப் பதினெட்டு முறை வரவழைத்து, பின்னர் ஒருமாதகாலம் உண்ணாவிரதம் அதுசரிக்கச் செய்து அது வெற்றி பெற்றதும் உபதேசித்தார். உடையவர் துறவியாதலின் தண்டு பவித்திரங்களோடு தனிமையாக வரச்செய்தார் உடையவரோ 'முதலியாண்டான்' (தண்டு), பவித்திரம் ('கூரேசன்') இவர்களோடு சென்றார்; அதற்கு விளக்கமும் சொன்னார். நம்பிக்கு ஒரே வியப்பு, ஒராண் வழியாக (குரு சீடர் முறையில்) உபதேசிக்கப்படும் இதனை எவர்க்கும் தெரிவிக்கக்கூடாது என்ற உறுதிமொழியும் பெற்றார். ஆயினும் ‘தான் அறப்பெய்து மாயும் தடமுகில்’ என்று பாராட்டப்பெறும் இளையாழ்வார் திருக்கோட்டியூர் கோபுரத்தின்மீதேறி சாதிபேதமின்றி திருமந்திரத்தையும், அதன் பொருளையும் அனைவரும் கேட்குமாறு முழக்கினார். போர்க்களத்தில் கண்ணன் காண்டீபனுக்குக் கீதையை உபதேசிக்கவில்லையா? அது போல எனலாம். ஆசாரியரும் உடையவரை எம்பெருமானாரே! என்று அழைத்து மகிழ்கின்றார். இது வரையில் பரமவைதிக சித்தாந்தம் என்று வழங்கிவந்த இந்தச் சித்தாந்தம்” இன்று முதல் 'எம்பெருமானார்தரிசனம்' என்று வழங்குவதாகும்” என்று வாழ்த்திப் போற்றுகின்றார்.

     “காரேய் கருணை இராமாநுசா!
          இக்கட லிடத்தில்
     ஆரே அறிபவர் நின்அருளின்
         தன்மை? (இராமா. நூற். 25)