பக்கம்:வைணமும் தமிழும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

வைணவமும் தமிழும்


(8). பிள்ளை உலக ஆசிரியார் : தேவப்பெருமாள் அம்சம் : திருவரங்கத்தில் வடக்குத் திருவிதிப்பிள்ளைக்கும், பூரிரங்க நாச்சியாருக்கும் முதல் திருக்குமாராய் அவதரித்தார். திருநட்சத்திரம்; ஐப்பசி-திருவோணம்.திருத்தம்பியார் அழகிய பெருமாள் நாயனார். திருநாமம்; உலகாசிரியர், துருக்கர் காலத்துப் பெருமாள் நாச்சியாருடன் வெளியேறின பொழுது அவன் பிரிவற்றாது தாமும் முதலிகளுடன் புறப்பட்டு 'சோதிடக்குடி' என்னும் சிற்றுாரில் பெருமாளுடைய எல்லாச் சொத்துகளையும் கள்ளர் அபகரித்ததைக் கேட்டு தாமும் தம்முடையவற்றையெல்லாம் பறி கொடுத்தார். பெண்டிரும், பேதையரும் உய்யக்கருதி அரிய பெரிய பதினெட்டு இரகசிய கிரந்தங்களை “அஷ்டாதசா இரகசியங்கள் (அஷ்டம் எட்டு. தசம்பத்து என்ற பெயரில் வெளியிட்டு தமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவரும் இலர் என்ற திருப்பெயரை நிலை நாட்டினார். இவைதவிர “தத்துவ விவேகம்”, “நாலு வார்த்தை” என்பவையும் இவர்தம் அருளிச் செயல்கள். இவர்தம் கருத்தைப் பின்பற்றி மணவாளமாமுனிகள் வரைந்த வியாக்கியனத்தின் பொருளமைப்பும், நடையழகும் ஒருவராலும் அளவிடக் கூடியதல்ல. இவருடைய திருவடிசம்பந்தம் பெற்றவர்கள்: திருவாய்மொழிப்பிள்ளை, வங்கிபுரம் சீரங்காசாரியர், கோட்டுரிலண்ணன், விளாஞ்சோலைப்பிள்ளை, வாதிகேசரி அழகிய மணவாள சியர், கிடாம்பி இராமாநுசப் பிள்ளான் மனப்பாக்கத்து நம்பி, சடகோபசீயர், நாலூராச்சான், நாலூர் பிள்ளை, கூரகுலோத்துங்கம் தாசர், திருவாய் மொழிப்பிள்ளை தமப்பனாரண்ணர், திருவாய்மொழிப் பிள்ளைத் திருத்தாயார் கொல்லிகாவல்தாசர், கோட்டுர் அழகிய மணவாளப்