பக்கம்:வைணமும் தமிழும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சீலர்கள்

171


பெருமாள் பிள்ளை, திகழக் கிடந்தாரண்ணன், அழகிய பெருமாள் நாயனார் ஆகியோர் வயது 105.

(9). அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்: நம்பெருமாள் அம்சம். திருநட்சத்திரம் : மார்கழி அவிட்டம். திருவரங்கத்தில் பிள்ளை உலக ஆசிரியரின் திருத்தம்பியாக அவதரித்தார். ஆசாரியர் : பிள்ளை உலக ஆசிரியர். இவர்தம் அருளிச் செயல்கள்; ‘ஆசாரிய ஹிருதயம், அருளிச் செயல் ரகசியம், மாணிக்கமாலை, அமலனாதி பிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்கியானங்கள், திருப்பாவை வியாக்கியானம் ஆறாயிரம்படி திருவந்தாதிகளுக்கு வியாக்கியானம் முதலியன.

(10). திருவரங்கத்தமுதனார்  : அணியரங்கத்தமுதனாரின் திருமகனார். கூரத்தாழ்வானின் திருவடி சம்பந்தி, அருளிச் செயல்: இராமாதுச நூற்றாந்தாதி

(11). ஆத்தான் சீயர் 'ஆத்தான் யதி' என்றும் வழங்கப் பெறுபவர். காஞ்சி பெருமான் கோயிலில் எழுந்தருளியிருந்த ஒரு சுவாமி இவர் ஆந்திர வைணவர்.ஒரு சமயம் ஐதராபாத்தில் அமைச்சராக இருந்தவர். மிக வனப்பாக இருந்த இவரைத் துருக்க அரசரின் மகள் திருமணம் செய்துகொள்ள விரும்பி இவரை வற்புறுத்தத் தொடங்கினாள். அதனைத் தவிர்க்கும் பொருட்டு இவர் தமது பதவியைத் துறந்து[1] ஒருவரும் அறியாவண்ணம் ஒடி வந்து பெருமாள் கோயிலில் துறவறம் பூண்டு கிழக்குச் சந்நிதிக்குத் தெற்கே மதிலோரத்தில் மடம் கட்டிக்கொண்டு அதில் எழுந்தருளியிருந்தார். அந்தத்


  1. தாயுமான அடிகளின் வாழ்க்கையில் இதையொத்த நிகழ்ச்சியை நினைக்கின்றோம்.