பக்கம்:வைணமும் தமிழும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வைணவமும் தமிழும்


கண்களையே பிடுங்கிக் கொண்டவர். அரசனுக்கு இவர் இராமாநுசர் அல்லர் என்று காட்டிக் கொடுத்தவன் “நாலூரான்” என்ற அமைச்சர். அரங்கர் சந்நிதியில் பெரிய பெருமாள் அர்ச்சகர் மூலமாக “உமக்கு என்னவேண்டும்?” என்று கேட்டதற்குக் கூரேசன்"நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். இந்தக் கருணை எவரெஸ்டு சிகரம் போல் இவர்தம் பேருள்ளத்தின் பெருமையைக் காட்டி நிற்கின்றது.

(2). முதலியாண்டான் : பரதாம்சம் பூவிருந்தவல்லிக் கருகிலுள்ள பச்சை வண்ணப்பெருமாள் கோவில் என்கின்ற “புருஷமங்கலத்தில்” அவதரித்தவர் உடையவரின் சகோதரி புத்திரர், திருநட்சத்திரம் : சித்திரையில் புனர்பூசம். ஆசாரியர்: இராமாநுசர் வேறு திருநாமங்கள் : “தாசரதி, மாதுல தேசிகன், ஸ்ரீவைணவதாசன், இராமாதுசபாதுகை’. திருக்குமாரர்; கந்தாடையாண்டான். சீடர் : இவர் திருக்குமாரர், கந்தாடை தோழப்பர். 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். ஸ்ரீபெரும் புதுரரில் எம்பெருமானாரின் திருமேனியை எழுந்தருளப் பண்ணினவர் வயது105

(3).அனந்தழ்வான்சத்துருக்கனாம்சம்.சிறுபுத்தூரில் அவதரித்தார். திருநட்சத்திரம் : சித்திரையில் சித்திரை. தம் ஆசாரியராகிய உடையவர் கட்டளைப்படி, ஏனையோர் தயங்க, திருவேங்கடமுடையானுக்குக் கைங்கரியம் செய்ய முன் வந்தவர். இதனால் எம்பெருமானார் நீதான் ஆண் பிள்ளை” என்று பாராட்டினார். இதனால் இவருக்கு ‘அனந்தாழ்வான் ஆண்பிள்ளை என்ற சிறப்புத் திருநாமும் ஏற்படலாயிற்று. திருமலையில் ஓர் ஏரிவெட்டி அதற்கு 'இராமாநுசன் புத்தேரி'