பக்கம்:வைணமும் தமிழும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சீலர்கள்

175


என்ற திருப்பெயரையும் அமைத்தார். ஏரிகட்டும்போது இவர் மண்சுமவாநிற்க பெருமாள் ஒரு சிறுவனாய் வந்து அவர் கூடையை வாங்கப்புக “என் பிழைப்பை ஏன் கெடுக்கப் பார்க்கிறாய்? நீயும் ஒன்றெடுத்துச் சுமக்கலாகாதோ’ என்றார். பின்னர் ஒரு நாள் நிறைகர்ப்பவதியான தேவிகளும் மண்சுமவா நிற்க, அதை அந்த பகவச் சிறுவன் வாங்கி ஒத்தாசைச் செய்வதைக் கண்ட இவர் கொட்டெடுத்து ஓடி அடிக்க, திருவேங்கடச்செல்வன் கோயிலுள்ளே புகுந்தான் என்பர்.இவர் கட்டிய ஏரிக்கருகில் ஒருநந்தவனத்தை உண்டாக்கி அதிலிருந்து மலர்களைப் பறித்துத் திருவேங்கடமுடையானுக்கு நாடோறும் மலர்த்தொண்டு புரிந்து வந்தார். ஒருநாள் மலர் கொய்கையில் நல்ல பாம்பு ஒன்று இவர் கையில் தீண்டியது. இவர் அவற்குப் பரிகாரம் ஒன்றும் செய்யாமல் மீண்டும் நீராடிபின்னரும் நந்தவனத்திற்குச் சென்று மலர்களைக் கொய்து மாலை தொடுத்துத் திருவேங்கடமுடையானைச் சேவிக்கச் சென்றார். அவ்வளவில் இறைவன் அர்ச்சகர் மூலமாக “அரவு தீண்டியும் அந்நஞ்சைத் தீர்க்க வேண்டா என்றிருப்பது tஇ) கேட்டருள, இவரும் “கடியுண்ட அரவு வலிதாகில் திருக்கோனேரியில் தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானைச் சேவிக்கின்றேன்; கடித்த அரவு வலிதாகில் விரஜையில் தீர்த்த மாடி வைகுந்த நாதனைச் சேவிப்பேன் என்றிருந்தேன்” என்று மறுமொழி தந்த பரமயோகி, இவரைக் கூரத்தாழ்வானுக்குப் பின் பிறந்தவர் (இளையவர்) என்று கூறுவர். இன்று திருமலையில் கட்டப்பெற்றுள்ள அனந்தாழ்வான் ஏரிவிடுதிகள் (Ananthalvan Tank Cottages) argir nI @GIFTudub @ C Gub றிருப்பது இவர்தம் தொண்டைநினைவு கூருவதற்காக