பக்கம்:வைணமும் தமிழும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சீலர்கள்

177


(7). பிள்ளை உறங்காவில்லிதாசர் : உறையூரை ஆண்டு வந்த சிற்றரசன் அகளங்க சோழன். இவன் அத்தாணிச் சேவகர்களில் முக்கியமானவர் உறங்காவில்லி என்ற மல்லன், சிலம்பம், குத்துச் சண்டை, மற்போர் முதலிய பயிற்சிகளில் நிகரற்றவர், பின்னர் இராமாநுசரால் ஆட்கொள்ளப்பெற்று அவர்தம் அருமருந்தன்ன சீடரானார். உடையவரின் கருவூலங் காக்கும் காவலர் பொறுப்பில் அமர்த்தப்பெற்றார். ஞான பக்தி, வைராக்கியங்களில் மிக்க இவர் உடையவரின் ஞான புத்திரர் என்ற நிலையையும் அடைந்தார். இவருடன் இவர்தம் மருமக்களான வண்டவில்லியும், செண்ட் வில்லியும் முறையே - வண்டலங்காரதாசர், செண்டலங்காரதாசர் என்ற தாஸ்ய நாமங்கள் பெற்று வைணவர்களாயினர்.

(8). பொன்னாச்சியார் : இவர் பிள்ளை உறங்கா வில்லிதாசரின் தேவியார். அழகு கொழிக்கும் வனப்புடையவர். உடையவரின் கடைக் கண் நோக்கினால் வைணவ தத்துவத்தில் ஆழங்கால் பட்டவர். கேள்வி ஞானத்தாலேயே பல நுட்பங்களை அறிந்து கொண்டிருந்தார். வைணவர்கள் பலர் இவரிடம் சம்பிரதாயத்தின் நுண்ணிய கருத்துகளைக் கேட்டு பயன் பெறும் அளவுக்கு ஞானச் செல்வத்தைப் பெற்றிருந்தார். கணவரிடம் ஆழ்ந்த பக்தியுடையவர். கணவர் பரமபதித்த அப்போதே தம் உடலைத் துறந்து விட்ட உத்தமி.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

வில்லிதாசர் தம் அந்திமதசையில் தம் துணைவியாரை நோக்கி “என்பிரிவு குறித்து நீ கலங்க வேண்டா. நம் அன்பு நெறியில் பிரிவுக்கோ மறைவுக்கோ இடம் இல்லை” என்று சொன்னார். அவரும் அப்படியே ஆறுதல் அடைந்தவர்போல் ‘இராமாநுசரின் திருவடிகளே சரணம் என்று சொல்லிக்