பக்கம்:வைணமும் தமிழும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

வைணவமும் தமிழும்


விட்டு வேறுவேறு நிலைகளை அடைவதாகின்ற வேறுபாட்டிற்கு இடமாக இருக்கும். அசித்தில் ஞானத்திற்குச் சிறிதும் இடம் இல்லை. இந்த அசித்தைச் சுத்த சத்துவம், மிச்ர தத்துவம்’, ‘சத்துவசூனியம்’ என்று மூன்று வகையாகப் பிரித்துப் பேசுவர் மெய்விளக்க இயலார்

(அ). சுத்த சத்துவம் : இராசச தாமச குணங்கள் கலவாதது. ஆதல், அழிதல் இல்லாதது; என்றும் நிலைபெற் றிருப்பது. இது ஞானத்தையும், ஆனந்தத்தையும் உண்டாக்கக் கடவதாக இருக்கும். இறைவனின் அநுபவத்தின் பொருட்டே உண்டான இச்சையாலே நித்திய விபூதியில் (பரமபதத்தில்) விமானம், கோபுரம், மண்டபம், உப்பரிக்கை முதலிய வடிவுடன் தோற்றம் கொள்ளும், தீ, கதிரவன் முதலிய ஒளியுள்ள பொருள்களும் மின்மினிக்கு ஒப்பாம்படி அளவிறந்த வடிவினைக் கொண்டது. இது நித்தியர், முத்தர், ஈசுவான் இவர்களாலும் அளவிடற்கு அரியது, கண நேரத்திற்குக் கணநேரம் முன்பில்லாத வியப்பினை உண்டாக்க வல்ல தாகவும் இருக்கும். நித்தியர், முத்தர், ஈசுவரன் இவர்கள் ஞானத்தால் தன்னை அறியவொண்ணாதபடி ஒளி விட்டுத் திகழும். ஆயினும் சம்சாரிகட்கு அங்கனம் தோற்றாது. இது வைகுந்தத்திலிருந்து மேலே எல்லையின்றி எங்கும் பாவி நிற்கும் தன்மையுடையதாக இருக்கும்.

(ஆ). மிச்ரதத்துவம்: இதுவே மூலப்பிரகிருதி என்பது இது சாத்துவிகம், இராசசம், தாமசம் என்னும் மூன்று குணங்களையுடையது. ஆதலின் இத்தத்துவம் 'திரிகுணம்' என்ற திருநாமத்தாலும் வழங்கும். இவற்றுள் சத்துவ குணமானது ஞானத்தையும், சுகத்தையும் நல்கி அந்த ஞான