பக்கம்:வைணமும் தமிழும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

189



சுகங்களாகின்ற இரண்டிலும் ஆசையை உண்டாக்கும். இராசச குணமானது ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர்கொள்ளும் ஆசையையும் சுவை, ஒளி முதலான ஐம்புலன்களால் உண்டாகும் இன்பங்களில் ஆசையையும், உழவு, வாணிகம் முதலிய தொழில்களில் ஆசையையும் உண்டாக்கும். தமோகுணமானது விபரீத ஞானத்தையும் சோம்பலையும் தூக்கத்தையும் உண்டாக்கும். இந்த முக்குணங்கள் சமமான நிலையில் உள்ளபோது பிரகிருதியின் விகாரங்கள் நாமரூப விசேடம் இல்லாமல் பிரமாணங்களால் காணக்கூடாதபடி அதிசூக்குமங்களாக இருக்கும் (இதுவே மகாப்பிரளய நிலை யாகும்). இந்தக் குணங்கள் ஏற்றத் தாழ்வை அடையுங்கால் இந்தப் பிரகிருதி பலவித தத்துவங்களாக மாறி நாமரூப விசேடத்தை உடையனவாகும். இவை பிரமாணங்களால் காணக் கூடியவை. இந்த மூன்று குணங்களுள் சாத்துவித குணத்தை யுடையவனுக்கு வீடணனையும்,இராசசகுணத்தை 6761) லுக்கு இராவணனையும், தாமசகுணம், உடையவனுக்கு கும்பகரு ணனையும் எடுத்துக்காட்டுகளாகக் கொள்வர் தவத்திரு சித்பவானந்த அடிகள்.

இந்த மூன்று குணங்களும் சேர்ந்த நிலையில் கர்மவான் களாகிய சம்சாரியினுடைய ஞானம் ஆனந்தம் இவற்றிற்கு மறைவை உண்ட ாக்கும். அதுவல்லாததனை அதுவாக நினைக்கும் விபரீத ஞானத்தையும் உண்டாக்கும். ஆன்மா அல்லாத உடலை ஆன்மா எனக் கொள்ளல், இறைவனுக்கு அடிமையாக உள்ள ஆன்மாவை சுதந்திரமானது எனக் கருதுதல், ஈசுவரன் அல்லாதவர்களை ஈசுவரனாகக் கருதுதல், புருஷார்த்தம் அல்லாத கைவல்யார்த்திகளையே புருஷோர்த்த