பக்கம்:வைணமும் தமிழும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

வைணவமும் தமிழும்


மாகக் கொள்ளல், உபாயமல்லாதவற்றை உபாயமாகக் கொள்ளல் போன்றவை விபரீத ஞானத்திற்கு எடுத்துக் காட்டுகளாகும். இன்னும் இத்தத்துவம் ஆதல் அழிதல் இல்லாதது. இஃது ஈசுவரனுடைய உலகப் படைப்பு முதலியவற்றிற்கு விளையாட்டுக் கருவியாக அமைந்து ஏற்றத்தாழ்வு உள்ள இடம், ஏற்றத்தாழ்வு அற்ற இடம் என்ற இடவேறுபாட்டாலும், அழிக்குங்காலம் படைப்புக்காலம் என்ற இரண்டு வகையான காலவேறுபாட்டாலும் சூக்கும விகாரங்களையும் துல விகாரங்களையும் உண்டாக்கும் தன்மையது. -

இந்த மிச்ர தத்துவம் இருபத்து நான்கு வடிவங்களாக இருக்கும். அதாவது சீவான்மாவைப் பூரிக்கும்படிச் செய்ய வல்ல சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்ற புலன்கள் ஐந்தும், மெய், வாய்கண், செவி,மூக்கு ஆகிய பொறிகள் ஐந்தும்; வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் ஆகிய கருமேந்திரியங்கள் ஐந்தும்; மண், நீர், எரி, கால், ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்தும்; இங்குள்ள இந்த ஆன்மாக்கள் பொருந்தியுள்ள மூலப்பிரகிருதி ஒன்றும்; மகத் (மான்) தத்துவம் ஒன்றும், அகங்காரத் தத்துவம் ஒன்றும் மனம் ஒன்றும் என இருப்பத்து நான்காம் அசித்தின் இந்த இருபத்து நான்கு தத்துவங்களையும் கலந்துதான் ஈசுவரன் தானாகாவும்,நான்முகன் மூலமாகவும் இந்த அகிலத்தைப் படைக்கின்றான்.

இத் தத்துவங்களை வடமொழியிலுள்ள முதல் 24 எழுத்துகள் குறிக்கின்றன. எவ்வாறெனில், க. இனத்தைச் சேர்ந்த ஐந்து எழுத்துகளால் பூதங்கள் ஐந்தும்; ‘ச இனத்தைச் & 5 சார்ந்த ஐந்து எழுத்துகளால் கருமேந்திரியங்கள் ஐந்தும்;'