பக்கம்:வைணமும் தமிழும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம்

193


இந்திரர் முதலியோர் வசிப்பர். துருவனுக்குமேல் ஒரு கோடி யோசனை உயரமுள்ளதாக இருப்பது மகர்லோகம்”. இதில் அதிகாரத்திலிருந்து விடப்பட்டவரும், அதிகார அபேட்சித ருமான இந்திரர் முதலியோர் இருப்பர். இந்த உலகிற்குமேல் . இரண்டு கோடியோசனை உயரத்திலிருப்பது ஜனர்லோகம். இதில் சனகர் முதலிய பரமயோகியர் வசிப்பர். ஜனர் லோகத்திற்குமேல் எட்டுக்கோடியோசனை உயரத்திலிருப்பது ‘தபோலோகம் ஆகும்.இதில் வைராக்கியரான பிரஜாபதிகள் வசிப்பர், தபோலோகத்திற்குமேல் நாற்பத்தொரு கோடி யோசனை உயரமுள்ளது சத்தியலோகம். இங்குத்தான் நான்முகன், விஷ்ணு, சிவன் இவர்கள் வசிப்பர்.

இந்தப் பதினான்கு உலகங்களையும் கோடி யோசனை எடுப்புள்ள அண்டகடாகமும், அதை அதனினும் பதின்மடங்கு அதிகமான ஜலதத்துவமும்,அதனை அதனினும் பதின்மடங்கு அதிகமான தேஜஸ் தத்துவமும், அதை அதனினும் அதிகமான வாயு தத்துவமும், அதை அதனினும் பதின்மடங்கு அதிகமான ஆகாய தத்துவமும், அதை அதனினும் பன்மடங்கு அதிகமான அகங்கார தத்துவமும், அதை அதனினும் பதின்மடங்கு அதிக மான மகத் தத்துவமும், அதை அளவிறந்ததாயும் பதின்மடங்கு அதிகமானதாயும் உள்ள அவ்யக்தமும் அதாவது மூலப் பிரகிருதியும் ஆவரித்துக் கொண்டிருக்கும். ஆக, இப்படி கடாகாவரணம், அக்கினி ஆவரணம், வாயுவாவரணம், . ஆகாயவாவரணம், அகங்காரஆவரணம், மகத்ஆவரணம், அவ்யக்தாவரணம் என ஏழு ஆவரணங்களாலும் இந்தப் பதினான்கு உலகங்களும் சூழப்பெற்றிருக்கும். சிறார்கட்கு விளையாட்டுக்குரிய பந்து போலே பகவானுக்கு இந்த உலகங்கள் விளையாட்டுக்குரிய கருவிகளாக இருக்கும்.மேலும் இவை ஒவ்வொரு படையாக வைத்து வீடு கட்டுவது போல