பக்கம்:வைணமும் தமிழும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

வைணவமும் தமிழும்


ஒவ்வொரு அண்டமாகப் படைக்கப்பெறாமல் நீர்க்குமிழிகள் போல் ஒரே காலத்தில் பகவானுடைய சங்கற்பத்தினால் படைக்கப் பெறும்.

(இ).சத்துவ சூனியம்: இதுவே அசித்தின் இரண்டாவது பகுதியாகிய காலத்தத்துவமாகும். காலம் என்பது எங்கும் பரந்து நிற்கும் ஒரே திரவியம். இதில் சாத்துவிகம், இராசசம், தாமசம் என்ற முக்குணங்கள் இல்லை. எதிர்நிகழ், கழிவு என்ற காலநிலைகட்கு இதுவே காரணமாகும். காலம் என்பது விநாடி நிமிடம், நாழிகை, முதல் பரார்த்தம் வரையிலுள்ள பகுதிகளைக் கொண்டது. "நிமிடம் பதினைந்து கொண்டது காஷ்டை, காஷ்டை முப்பது கொண்டது கலை; கலை, முப்பது கொண்டது முகூர்த்தம் முகூர்த்தம் முப்பது கொண்டது.நாள்; நாள்முப்பது கொண்டது மாதம் மாதம் இரண்டு கொண்டது. இருது; இருது மூன்று கொண்டது அயனம், அயனம் இரண்டு. கொண்டது ஆண்டு; பரார்த்தம்"

இங்ஙனம் மனித ஆண்டு 360 கொண்டது. தேவ ஆண்டு; தேவ ஆண்டு 12,000 கொண்டது ஒரு சதுர்யுகம், 71 சதுர்யுகம் கொண்டது. ஒரு மந்வந்தரம் 14 மந்வந்தரம் கொண்டது 1000 சதுர்யுகம். இது நான்முகனுக்கு ஒரு பகல் 2000 சதுர்யுகம் நான்முகனுக்கு ஒருநாள். இந்த நாட்களால், மாதம், வருடங்களைப்பெருக்கி அந்த வருடங்கள் 100 ஆனால் நான்முகன் ஆயுள் முடியும். இதற்குப் 'பரம்' என்று பெயர். இங்ஙனம் பல்வேறு வடிவாகத் தோன்றக் கடவதாய், ஆதி, அந்தம் அற்றதாய், ஈசுவரனுடைய உலகப் படைப்பு, அளிப்பு, அழிப்பு - ஆகிய விளையாட்டுக் கருவியாய் ஈசுவரனுக்குச் சரீரமாக அமைந்தது இக் காலத் தத்துவம். இவ்வாறு காலத்தின் கூறுகளை பராசரபகவான் விஷ்ணுபுராணத்தில் பேசுவர்.