பக்கம்:வைணமும் தமிழும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

வைணவமும் தமிழும்


இதில் கருடனுடைய உடலாக நிற்கின்ற வேதத்தின் பொருளாகவுள்ள எம்பெருமான் திருமேனி காட்டப் பெறுகின்றது. சீவன் இரத்தினங்களுள் சிறந்த கெளஸ்த்துவ இரத்தினமாகவும், அழியாத மூலப்பிரகிருதி ரீவத்ஸம் என்னும் மறுவாகவும், மகாந் என்றும் தத்துவம் கெளமோதகி - என்னும் கதையாகவும், ஞானம் ‘நந்தகம் என்னும் கத்தி யாகவும், அஞ்ஞானம் கத்தியின் உறையாகவும் தாமசாகங் காரம்'சார்ங்கம்’ என்னும் வில்லாகவும், சாத்துவிகஅகங்காரம் பாஞ்சசன்னியம்’ என்னும் சங்காகவும், மனம் என்னும் தத்துவம் “சுதர்சனம்’ என்னும் சக்கரமாகவும், ஞானேந் திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும்,அம்புகளாகவும், தந்மாத்திரைகள் ஐந்தும், பூதங்கள் ஐந்தும் ஆகியவற்றின் வரிசை'வனமாலையாகவும் எம்பெருமானின் திருமேனியில் இருப்பதை அழகாகக் காட்டுவர் சுவாமிதேசிகன்.

3. ஈசுவரன் :

சீமந் நாராயணனே சர்வேசுவரன். இவன் எப்பொழுதும் மாறுபடாத் தன்மையுடையவன். சத்தியம், ஞானம், ஆனந்தம், அனந்தம் இவற்றின் சொரூபமாக இருப்பவன். இடத்தாலும் காலத்தாலும் அளவிடப்பெறாதவன். மூன்றுவித சேதந. அசேதந பரிமாண ரூபமான வேறுபாட்டின் குறைகள் தட்டாதவன். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்குவித பலன்களையும் உயிர்கட்கு நல்கி அவற்றின் புகலிடமாக இருப்பவன். தன் சொரூபத்தாலும் திருமேனியாலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். ஞானம் சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம் தேஜஸ் முதலிய மங்களக் குணக் கூட்டங்