பக்கம்:வைணமும் தமிழும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

வைணவமும் தமிழும்


(அ) பரத்துவம் : இது நித்திய விபூதியில் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் நீளாப்பிராட்டியார் என்ற மூன்று தேவிமார்களைக் கொண்டிருக்கும் இருப்பு பஞ்சாயுதங்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் இருப்பு மாகும். ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்ற ஆறு திருக்குணங்களும் இவனுக்கு உண்டு. இவனைப் ‘பரவாசுதேவன் என்ற திருப்பெயரால் வழங்குவர்.

(ஆ) வியூகம் : இது லீலாவிபூதியில் (இந்த உலகில்) அதன் படைப்பு, அளிப்பு, அழிப்பு இவற்றை நடைபெறச் செய்வதற்காகவும் சம்சாரிகட்கு வேண்டியவற்றை ஈந்து வேண்டாதவற்றைப்போக்கி அவர்களைக் காத்தற்பொருட்டும் மோட்சத்தை விரும்பி. தன்னை இடைவிடாது நினைப்பவர் கட்கு (உபாசிப்பவர்கட்கு) அவர்தம் தளைகளைப் போக்கித் தன்னை வந்து அடைவதற்குக் காரணமான பேரருளைச் சுரப்பதற் காகவும் வியூகம் “வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்நன், அதிருத்தன்” என்ற பெயர்களுடன் இருக்கும் இருப்பாகும்.

(i) வாசுதேவர் : இவர் வியூக வாசுதேவன் என்று வழங்கப் பெறுவார். வாசுதேவரூபமான பரத்துவத்தில் இருப்பது போல இவரிடமும் ஞானம், சக்தி பலம், ஐசுவரியம், வீரியம்,தேஜஸ் என்ற ஆறு குணங்களும் நிறைந்திருக்கும். ஏனைய மூன்றில் அவரவர் மேற்கொண்ட செயலுக்குத் தக்கவாறு ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு குணங்கள் விளக்கமாக இருக்கும். படைக்கப்பெற்ற சேதநர்களைக் காத்தற் பொருட்டு, தேவர் முதலியவர்கட்கு ஆபத்து நேரிட்டகாலத்துச் சென்று அறிவிக்கலர்ம்படி அவதாரங்கட்கெல்லாம் நாற்றங்காலான திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மீது