பக்கம்:வைணமும் தமிழும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

வைணவமும் தமிழும்


பிரமாணமாய்) எழுந்தருளியிருக்கும் இருப்பே இந்த நிலையாகும். இது விக்கிரக வியாப்தியாகும்.

(உ) அர்ச்சாவதாரம் : அடியார்கள் எதைத் தமக்குத் திருமேனியாகக் கொள்ளுகின்றார்களோ அதனையே இறைவன் தனக்கு வடிவமாகவும், அவருகந்து வைத்த பெயரையே தனக்குப் பெயராகவும் கொண்டுள்ள நிலையாகும். இந்நிலையில் இறைவன் இன்ன இடத்தில் இன்னகாலத்தில் இன்னாரிடத்தில் தோன்றி சந்நிதி பண்ணவேண்டும் என்கின்ற நிலை இல்லாதபடி விரும்பிய எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும் எவரிடத்திலும் தோன்றிச் சந்நிதி பண்ணி நீராட்டம்,தளிகை, இருப்பு முதலான எல்லாச் செயல்களையும் உடையவனாய் திவ்விய தேசங்களிலும், அடியார்களின் திருமாளிகையிலும் எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். உலகியலில் மண்டியிருப்போருக்குத் தன்பக்கல் ருசியை உண்டாக்குதலும் பிறகு தன்னைத் துதிப்பவர்களுடைய கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம்படி போக்கியத்திற்கு இடமாயிருத்தலும், தன்னை உபாயமாகப் பற்றுமளவில் எல்லா உலகினரும் உபாயமாகப் பற்றுதற்குத் தகுதியா யிருத்தலும் பரமபதத்தில் போய் அநுபவிக்க வேண்டாமல்,

        அண்டர்கோன் அணிஅரங்கன் என் அமுதினைக்
        கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே16

என்று திருப்பாணாழ்வார் அநுபவித்தவாறு அநுபவிக்கத் தக்கதாக இருத்தலும் இந்த அர்ச்சாவதாரத்தில் முற்றுப் பெற்றிருக்கும்.


16. அமலனாதி-10


16. அமலனாதி-10