பக்கம்:வைணமும் தமிழும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

வைணவமும் தமிழும்


கட்கு) அப்பாற்பட்டிருப்பவன் பரத்துவ நிலை எம்பெருமான். அப்படி மிக்க நெடுந்தொலைவு அன்றியே இந்த உலகின் எல்லைக்குள்ளே இருப்பினும் “பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்”20 என்று நம்மாழ்வார் கூறுகிறபடி கேட்டிருக்கும் என்பதன்றிச் சென்று காண அரிதாம்படி இருப்பவன் வியூகநிலை எம்பெருமான்.

மிக அண்மையில் இருந்தும் வெள்ளம் வருங்காலத்தில் இருந்தவர்கட்கு மட்டிலும் பருகலாம்படியாய் வேறு காலங்களில் இருப்பவர்கட்குப் பருகுவதற்கு அரியதாய் இருக்கும் பெருக்காறு போலே,"மண்மீது உழல்வாய்’ என்று நம்மாழ்வார் கூறுவதுபோல் பூமியிலே அவதரித்துச் சஞ்சரித்தும் அக்காலத்தில் வசித்தவர்கட்குமட்டிலும் அடையத்தக்கவர்களாய்ப் பிற்காலத்தில் உள்ள இவனுக்குக் கிட்டாதபடி இருப்பவர்கள் விபவநிலை எம்பெருமான்கள். மேற்கூறிய எம்பெருமான்கள் போலன்றி காண்பதற்குத் தேசத்தாலும், காலத்தாலும், கரணத்தாலும் கிட்டுவதற்குச் சேயதாய் அன்றி. திருக்கோயில்களிலும், திருமாளிகைகளிலும் என்றும் ஒக்க எல்லார்க்கும் கண்ணுக்கு இலக்காகும்படி பின்னானார் வணங்கும் சோதியாக” இருப்பவன் அர்ச்சாவதார எம்பெருமான், பல இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலைகளை நினைந்து மடுக்கள்போலே என்று பன்மையால் அருளிச் செய்தார். அவதாரங்களின் குணங்கள் எல்லாம் அர்ச்சையிலேயே குறைவற்று நிறைந்திருப்பதாலும் அவதாரங் களின் திருவுருவங்களை அர்ச்சை வடிவமாகப் பலவிடங்களில் மேற்கொண்டிருப்பதனாலும் "அதிலேதேங்கினமடுக்கள்போலே” என்று குறிப்பிட்டார் இந்த ஆசாரியப் பெருமகனார்.


20. பெரி. திருவந். 34 21. திருவாய் 6.9:5 22. திருநெடுந்.10


20. பெரி. திருவந். 34 21. திருவாய் 6.9:5 22. திருநெடுந்.10