பக்கம்:வைணமும் தமிழும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ மந்திரங்கள்

207


அதில் ஏறி மறைந்துள்ள (தொக்கி நிற்கும்) நான்காம் வேற்றுமை (சதுர்த்தி)-அதாவது நாராயணாய என்பதிலுள்ள ஆய’ என்பது-சேஷத்துவத்தின் அநந்யார்ஹத்துவத்தையும்[1] மகாரம் ஞானவானாகிய சீவனையும் (சேதநனையும்)குறிக்கின்றன.

நமஸ்ஸு என்பதை ந+ம: என்று பிரிக்கலாம். இதில் ம; எனக்கு உரியன் என்றும், ந-அல்லன், அஃதாவது ‘எனக்கு நான் உரியன் அல்லன்’ என்றும் பொருள் கிடைக்கின்றது. எனக்கு நான் உரியன் அல்லன் என்பதனால் ‘பிறனுக்கு (ஈசுவரனுக்கு) உரியன்’ என்பது பெறப்படுகின்றது. இம்முறையில் நமஸ் என்ற பதம் ஈசுவர பாரதந்திரியத்தைத் தெரிவிக்கின்றது என்பது தெளிவு.

‘நாராயணாய’ என்ற பதத்தின் பொருள் ‘நாராயணன்’. இப் பதம் வடசொல். இதில் நார+அயன என்ற இரண்டு பதங்கள் சேர்ந்து ஒரு பதமாக உள்ளது. இதற்கு இரண்டு வகையாகப் புணர்ச்சி இலக்கணம் கூறப்படும்.

முதல் வகை : நாரணாம் + அயநம் என்பது, தத்புருஷஸமாஸம், இது வேற்றுமைப்புணர்ச்சி எனப்படும். இது நாரங்களுக்கு அயநமாயிருப்பவன் என்ற பொருளைத் தரும், அயநம் என்ற சொல் உபாயம், பலன், ஆதாரம் என்ற மூன்று பொருள்களை உணர்த்தும். நரனாகிய சீவான்மாவின் கூட்டம் ‘நாரம்’ எனப்படும். எம்பெருமான் சேதநர்களின் கூட்டத்தின் உபாயமாகவும் அநுபவிக்கப்படும் பலனாகவும், தன்னிடமிருந்து சேதாநாசேதநங்களுக்கு ஆதாரமாகவும் ஆகின்றான் என்பது வேற்றுமைப் புணர்ச்சியால் ஏற்பட்டது.


  1. 7. அநந்யார்ஹத்துவம் - மற்றவருக்கன்றி ஈசுவரனுக்கே உரித்தாயிருத்தல்.