பக்கம்:வைணமும் தமிழும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ மந்திரங்கள்

209


பெருமையும் சிறப்பும் : மந்திரங்கள் அனைத்திலும் சிறந்தது திருமந்திரம். பல சிறப்பான பொருள்களைக் கொண்டது; எல்லாப் பலன்களையும் அளிக்கவல்லது. மாதர்களும், நான்காம் வருணத்தாரும் இதனை அதுசந்திக் கலாம். இந்த மந்திரம் ஒரு முழுமையையும் பெற்றுள்ளது. இவ்வுலகிலுள்ள விண்ணும் மண்ணும் அவற்றிலுள்ள உயிர்களும் பொருள்களும் எம்பெருமானுடைய விபூதிகள். தத்துவமான சரீர-சரீரிபாவனை (உயிர் உடல் உறவு) இதனை நன்கு விளக்கும். இந்த உயிர்களுள்ளு. பொருள்க ளுள்ளும் ஈசுவரன் இருத்தலால் அவற்றை வியாப்பியப் பொருள் என்று வழங்குவர். ஈசுவரன் வியாபகப்பொருள் ஆகின்றான். இங்ஙனம் எல்லாப் பொருள்களிலும் இருக்கும் அவனுடைய இருப்பு வியாப்தி என்றும்,அவன் ஒவ்வொரு பொருளிலும் அந்தர்யாமியாக இருப்பதை வியாப்பித் திருக்கும் விதம் என்றும் கூறப்பெறும். உடலுக்கு உயிர் சத்தைத் தருவதுபோல ஈசுவரனும் ஒவ்வோர் உயிர்ப்பொருளிலும் ஆன்மாவாக இருந்து அந்தந்தப் பொருளின் சத்தை - நிர்வகிப்பதையே பயனாக அமைகின்றான்.

திருமந்திரமாகிய நாராயணபதத்தை அருமறைகளும் விரும்பின. முனிவர்களும் ஆசாரியர்களும் ஆழ்வார்களும் விரும்பினர். ஆசாரியர்களுள் தங்களை வந்தடைந்தவர்கட்கு உபதேசித்து அவர்களை உய்வித்தனர்.

இம் மந்திரத்தின் பொருளான ஈசுவரனைக் காட்டிலும் இம் மந்திரத்தின் பெருமை மிகச் சிறந்தது."வாச்யப்பிரபாவம் போலன்று. வாசகப் பிரபாவம்” (முமுட்சு-14, என்று முமுட் சுப்படியும் பேசும்.(பிரபாவம்-மேன்மை). இத்திருமந்திரத்திற்கு