பக்கம்:வைணமும் தமிழும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

’‘வெளியிடப்பெற்றதால் இம்மந்திரம் எல்லாச் சூக்திகளிலும் சிறந்து நிற்பதாகப் பெரியோர்கள் கருதுவர். இதனை ஒருகால் உச்சரித்தாலும் வீடுபேறு வரையிலுள்ள எல்லாப் பலன்களையும் பெறலாம். இதனால் இது ‘மந்திர இரத்தினம்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது.

இதன் பொருளை விளக்கும்போக்கில் பிள்ளை உலக ஆசிரியர்,

“இதன் முற்கூற்றால், பெரியபிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது; பிற்கூற்றால் அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது.” (முமுட்சு 122)

என்று சூக்தியிட்டு விளக்குவர். இதில் முதல் வாக்கியத்தால் “பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரனுடைய இரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றுகின்றேன்” என்னும் பொருள் கிடைக்கின்றது. இரண்டாவது வாக்கியத்தால் “பெரியபிராட்டியாரும் ஈசுவரனுமான சேர்த்தியில் என்றும் கைங்கரியத்தைப் புரிவேனாக” என்னும் பொருள் கிடைக் கின்றது. அதாவது முதல் வாக்கியம் உபாயத்தையும், இரண்டாவது வாக்கியம் பலனையும் வெளியிடுகின்றன என்று இதனைச் சுருக்கமாக உரைக்கலாம்.

துவயமந்திரத்தின் முக்கியமான பகுதி பெரிய பிராட்டியார் புருஷகாரபூதை[1]யாகச் செயற்படுவது சேதநன் தான் எம்பெருமானுக்குச் சேஷபூதன்(அடிமை) ஆகவும், எம்பெருமான் தனக்குச் சேஷி (தலைவன்) யாகவும் இருக்கும்


  1. 8. புருஷகார பூதை- தகவுரை கூறுபவள்.