பக்கம்:வைணமும் தமிழும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

வைணவமும் தமிழும்


உபதேசித்தான். இவற்றைச்செவிமடுத்த பார்த்தன் பக்தியோகம் கடினமாயும் காலங்கடந்து பலன் தருவதாயும் இருப்பதைக் கண்டு மீண்டும் கலக்கமடைய, பார்த்தசாரதியும் எளிமையாக மேற்கொள்ளக் கூடியதும் சொரூபத்திற்கு ஏற்றதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான பிரபத்திநெறியை (சரணாகதி தத்துவத்தை)ப் போதித்தான். இஃது இறுதி உபாயமாக இருத்தலினாலும் கீதையின் இறுதி சுலோகமாக (18:66) அமைந்திருப்பதினாலும் இவற்றைத் தெரிவிக்கும் சுலோகம்’ ‘சரமசுலோகம்’ என்று திருநாமம் பெறுவதாயிற்று.

(3)இச் சுலோகத்தின் முன் வாக்கியம் பிரபத்திக்கு அதிகாரியான சேதநன் செய்யவேண்டியவை இன்னவை என்பதை விளக்குகின்றது. பின் வாக்கியம் உபாயபூதனான தான் (ஈசுவரன்) தன்னைப் பற்றின சேததன் செய்ய வேண்டிய வற்றைத் தெரிவிக்கின்றது. இதற்குச் சேதநனிடம் அமைய வேண்டியவை ஆகிஞ்சன்னியமும் அநந்யகதித்துவமும், ஆகிஞ்சன்யம் என்பது, கன்மஞானபக்திகளாகின்ற மற்ற உபாயங்களின் தொடர்பற்று இருத்தல், அநந்யகதித்துவம் என்பது, ஆன்ம இரட்சணத்திற்கு எம்பெருமானைத் தவிர வேறோர் இரட்சகப்பொருள் அற்றிருத்தல், ஆகிஞ்சன் னியத்தை ‘சர்வ தர்மாந்பரித்யஜ்ய’ என்ற தொடரால் தெரிவிக்கின்றான். அநந்யகதித்துவத்தை மாமேகம் சரணம் விரஜ’ என்ற தொடரில் அறிவிக்கின்றான்.இதனைத்தான் புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ (6.10:10) என்ற திருவாய்மொழிப் பாசுரப் பகுதியில் தெரிவிக்கின்றார் ஆழ்வார்.

இஃதன்றியும் பகவானைப் பற்றும் இப்பற்றுதலைத் தன்பேற்றிற்கு உபாயமாகக்கொள்ளின் எம்பெருமானின் வேறு