பக்கம்:வைணமும் தமிழும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

223


முறைகள்) நிற்றல் இருத்தல், கிடத்தல் என்பவை. பலன் கை புகுந்த மாத்திரத்தில் - என்னிடம் ருசி பிறந்ததும் - அவன் திவ்விய தேசங்களில் நிற்றல் இருத்தல், கிடத்தல்களை எல்லாம் என் நெஞ்சுலே செய்தருளினான்” என்கின்றார். மேலும் “நான் ஞானப்பிறப்பு பெற்றேன் இல்லை; அது பெற்றபிறகு நான் எம் பெருமானை மறக்கவில்லை.” அடுத்த பாசுரத்தில் (65) “எம் பெருமான் திருவேங்கடத்தில் நிற்பதும், திருநாட்டில் (பரமபதத்தில்) இருப்பதும், திருப்பாற்கடலில் கிடப்பதும், தன்னோடு உண்டான முறைமையை அறியாது நான் ஆற்றலற்றிருந்த காலத்தில்தான். நான் முறைமையறிந்து (சம்பந்த ஞானம் பெற்றுப்) பரிமாறின பின்னர் அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் என்நெஞ்சில் - என்இதயத்தில் - நடைபெறுகின்றன” என்கின்றார்.

இந்த ஆழ்வார் எம்பெருமான் தன் மனத்தில் தனியாக வந்ததைக் கூறினார். பெரியாழ்வாரோ அவன் தானும் தன் குடியிருப்புமாகத் தன் நெஞ்சில் புகுந்ததைக் கூறுவார்.


அரவத்து அமளியி னோடும்
அழகிய பாற்கட லோடும்
அரவிந்தப் பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து (பெரியாழ் திரு. 5.2;10)

என்ற பெரியாழ்வாரின் திருமொழிப்பாசுரத்தில் இதனைக் காணலாம்.


மயர்வற மதி நலம் அருளப்பெற்ற நம்மாழ்வாரும்,


அடங்கொழில் சம்பத்து
அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று
அடங்குக உள்ளே (திருவாய் 1.2;7)