பக்கம்:வைணமும் தமிழும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

வைணவமும் தமிழும்



       [சம்பத்து-எம்பெருமானின் விபூதி அடங்க-எல்லாம்
       (முற்றிலும்); அடங்க அஃதெல்லாம், ஈசன் அஃது
       எம்பெருமானுடைய எழில்-சம்பத்து (என்று துணிந்து)
       உள்ளே விபூதிக்குள்ளே; அடங்குக-சொருகிப்போவது]

என்று கூறுவர். “நித்தியவிபூதியாகிய பரமபதமும், லீலா விபூதியாகிய இந்த உலகமும் ஆகிய எல்லாம் சம்பத்துகளும் r நம்முடைய சுவாமியின் சொத்துகள் என எண்ண வேண்டும்: அந்தச் சம்பத்துக்குள் நாமும் அடங்கினோம் என்று அநுசந்தித்துக் கொண்டு கைங்கரியம் செய்ய வேண்டும்” என்பது பாசுரத்தின் பொருள்.எம்பெருமானது விபூதிக்குள்ளே தானும் ஒருவனாக அடங்கப் பார்க்க வேண்டும். அதற்கு வெளிப்பட்டு ஆட்டம் போட்டால் விநாசமே உண்டாகும்: அதற்கு உட்பட்டுவிட்டால் கூசவேண்டிய அவசியமே இல்லை என்பது இதில் தெளியும் மாபெரும் உண்மை. அஃதாவது ‘உடைமை உடையவன்’ என்ற சம்பந்தஞானம் அடியாகத் தானும் அவன் விபூதியில் ஒருவனாகச் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவே தேர்ந்த உண்மையாகும்.

(2). நவவிதசம்பந்தம் : எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம் ஒன்பது வகைப்படும் என்று சாத்திரங்கள்


5. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி கட்டுக் கொலை செய்யப்பெற்றபோதும் தி.மு.க. முதன் முதலாக ஆட்சிக்கு வந்தபோதும் நம் அருமைமிகு இராஜாஜி அவர்கள் கல்கியில் இந்தப் பாசுரத்தைக் காட்டித் தலையங்கம் எழுதியதை ஈண்டு நினைவு கூரலாம்.

6. அரசுகள் ஆளுநரால் அகற்றப்பெறுவதற்கும் கட்சிகள் தேர்தலில் தோற்பதற்கும் குடியரசு ஆட்சி அமைவதற்கும் அகந்தை மிக்க ஆட்சிகளே காரணமாகும்.