பக்கம்:வைணமும் தமிழும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

227


        எக்காலத்தும் எந்தையாய்
           என்னுள் மன்னி (2.9;8)

என்ற நம்மாழ்வாரின் திருவாய் மொழித்தொடர் இக்கருத்தை அரண் செய்கின்றது. சீவான்மாக்களுக்கு அயந சம்பந்தமான பரமான்மா சம்பந்தம் அநாதியாக இருந்து வருவதுபோல் அசித்து சம்பந்தமான பிரகிருதி சம்பந்தமும் அநாதியாக இருந்து வருவதே. ஆயினும் அசித்து சம்பந்தம் ஒருகாலத்தில் நீக்கப்படும் “அயந’ சம்பந்தமான பரமான்மா உறவு ஒழிக்க ஒழியாதது”. இக்கருத்து ஆசாரிய ஹிருதயத்தின்,

‘ஒன்று கூடினதாய்ப் பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே பழவடியேன் என்னுமது ஒன்றுமே ஒழிக்க ஒழியாது' (12)

என்ற சூத்திரத்தில் தெளிவாக்கப்பெறுகின்றது. இந்த உடல் சம்பந்தம் இடையில் வந்தேறியாய் நல்வினை தீவினை காரணமாக வருவது; இது யாதானும் ஒரு காலத்தில் அழியக் கூடியதாக இருக்கும். நாராயண சம்பந்தம் அநாதியாய் ஒருவித காரணமும் இல்லாமல் வந்ததாகையால் என்றும் உளதாய் இருக்கும். இடையில் வந்த சரீர சம்பந்தத்தை அநாதி என்று சொல்லுதல் பொருந்துமோ? என்ற வினா எழுகின்றது. அதற்கு மணவாளமாமுனிகள் “வந்தேறியான காலத்திற்கு அடி தெரியாமையாலும் இவரும் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) அநாதி’ என்றார். ஒருகால வரையில் அஃது இறைவனுடைய திருவருளால் மறையக் காண்கையால் வந்தேறி என்பது ஒருதலை” என்று விளக்குவர்.

திருமந்திரத்தின் முழுப்பொருளையும் அநுசந்திக்கத்தக்கதாக அமைந்திருக்கும் திருப்பாசுரம் ஒன்று பெரிய திருமொழியில் உண்டு. - -