பக்கம்:வைணமும் தமிழும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

233


          தருமனையே நோக்கும்;
              ஒண்தாமரையாள் கேள்வன்
          ஒருவனையே நோக்கும்
              உணர்வு. (67)

என்பது பொய்கையாழ்வாரின் திருவாக்கு ஞானம் என்பது பலவிதம். பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு துறையிலும் (பொருளியில், அரசியல், மருத்துவயியல், பொறியியல் அறிவியல் போன்றவை) படித்துப் பட்டம் பெற்ற ஒவ்வொரு வனும் தன்னை ஞானி என நினைத்துக் கொள்ளுகின்றான். ஆனால், உண்மையான ஞானம் என்பது எது? எம்பெருமான் என்ற பரம்பொருளை அறிகின்ற அறிவு ஒன்றுதான் ஞானமாகும் என்று சாத்திரங்கள் கூறும் விடைதான் இப்பாசுரத்தில் “ஒண்தாமரையாள் கேள்வன், ஒருவனையே நோக்கும் உணர்வு” என்ற பகுதியில் கூறப்பெற்றுள்ளது. மற்றவை யாவும் எடுத்துக்காட்டுகளாக அருளிச் செய்யப் பெற்றவை.

ஆறுகள் மாக்கடல் நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமதர்மனையே நோக்கிக் கிட்டுவதும் எப்படி நியதமாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றியல்லது இதரவிஷயங்களைப் பற்றி உண்டாகும் அறிவு அறிவல்ல; அவை அறிவின்மைக்குச் சமானமானவையே.

இந்த உறவுவினை குலசேகரப்பெருமான் திருமொழியில் “எத்தனையும் வான்மறந்த” (5:7) என்ற பாசுரத்தில் தெளிவாகக்காணலாம்