பக்கம்:வைணமும் தமிழும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

வைணவமும் தமிழும்


(vi) சுவம்-சுவாமி சம்பந்தம் : இதைச் சொத்து சொத்துக்குரியவன் (சொம்-சுத்து); உடைமை-உடையவன்) உறவு என்று கூறலாம். இந்த உறவு 'விடுமின்முற்றவும்' (12) என்ற திருவாய்மொழியின்,

     நீர்நுமது என்றிவை
         வேர்முதல் மாய்த்து (3)

என்ற மூன்றாம் பாசுரத்தில் அமைந்துள்ளது. விடவேண்டிய பொருள்கள் பலப்பல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெருபாடாகுமாதலால் விடவேண்டியவற்றைச் சுருங்க அருளிச் செய்கின்றார். நீர்நுமது - கேட்டினை விளைவிக்கின்ற யான் எனது என்ற சொற்கள். இப்பாசுரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின் ‘யான்'எனது என்ற தன்மைப்பெயர்களை நீர், நுமது என்று முன்னிலையாக அருளிச் செய்கின்றார். இனி, செருக்கினைப் புலப்படுத்தும் அச்சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுவதற்கு அஞ்சி நீர் நுமது என்கின்றார். இங்கு நீர், துமது என்பது சம்சார வித்து; ‘வேர் முதல் மாய்த்து’ என்பது மருந்து. இங்கே இன்சுவைமிக்க ஈட்டின்சூக்தி."நான்’ 'எனது’ என்று தம் வாக்காலே சொல்ல மாட்டாரே நாக்குவேம் என்று” என்பது.

'நின்னையே தான் வேண்டி' (5:9) என்றபெருமாள் திருமொழிப் பாசுரத்தில் இந்த உறவு புலப்படுவதாகக் கூறுவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணாசாமி11. இதில் செல்வத்துக்கு


11. பெருமாள் திருமொழி-திவ்வியார்த்த தீபிகை-பக். 31