பக்கம்:வைணமும் தமிழும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

வைணவமும் தமிழும்


உயிர் இருப்பதற்கும், உடல் உயிர் ஆகிய இரண்டினுள் இறைவன் இருப்பதற்கும் மற்றொரு வேறுபாடும் உண்டு. உயிர் உடலினுள் இருக்கும்போது அவ்வுடலுக்குரிய வளர்ச்சி தேய்வுகள் (விகாரங்கள்) உயிருக்கு உண்டாவதில்லை. ஆனால் உடலைப் பற்றிய இன்பதுன்ப உணர்ச்சிகள், அறிவின் சுருக்கம், பெருக்கம் ஆகியவை உயிருக்கு உண்டு. உடலின்மீது தண்ணிய காற்று வீசுங்கால் இன்புறுதலும், தீ சுடுங்கால் துன்புறுதலும் உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நேரிடுகின்றன. இனி, குழந்தைப் பருவத்தில் அதனினுள்ளிருக்கும் உயிரின் அறிவு கருங்கிய நிலையிலிருந்து பின்பு வளர்ச்சியுறுதலைக் காண்கின்றோம். மற்றும், மக்கள் உடம்பினுள் உள்ள உயிர் ஐம்பொறி அறிவும் உடையதாக உள்ளது. அவ்வுயிரே மரம், எறும்பு முதலிய உடல்களில் புகுந்தால் ஐம்பொறி அறிவு மின்றிச் சில குறையவும் பெறுகின்றன. இனி உயிர் பரு உடலைப் பெறாத நிலையில் அறிவு சுருங்கி இருத்தலும், அறிவு விரிந்திருத்தலும் உண்டு. இங்ஙனமாக உடலைப்பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக்கேற்ப இன்ப துன்ப உணர்ச்சிகளும் அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளிவாகும். ஆனால், உடல் உயிர் இரண்டினுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை. இவற்றிற்குக் காரணம் 'பிரவேச ஹேது விசேடம்' என்பர் மெய்விளக்க அறிஞர்கள். ஆன்மா உடலினுள் கர்மம் அடியாகப் பிரவேசிக்கின்றது. இறைவன் - உடல், உயிர் இரண்டினுள்ளும் திருவருள்காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக்கூடத்தில் சிறையனும் கிடந்தான்அரசகுமாரனும்