பக்கம்:வைணமும் தமிழும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

239


முதலியவற்றைப் படைத்தலும் வியஷ்டி சிருஷ்டி என்று வழங்கப்பெறும். வியஷ்டி வேறுவேறு. இந்தப் பாசுரத்தில் ‘முனிமாப் பிரம்ம முதல் வித்து’ என்பது சங்கல்பிக்கின்ற பரப்பிரம்மம். இதுதான் ஆதாரமாக இருப்பது. இதனால் படைக்கப் பெற்ற அண்டம் முதலானவை ஆதேயமாக இருப்பன. ஆகவே இப்பாசுரம் ஆதார-ஆதேய உறவைத் தெரிவிக்கின்றது. முதலடியிலுள்ள ‘தோன்றி என்பதனால் சமஷ்டி சிருஷ்டியும்,இரண்டாவது அடியிலுள்ள முளைப்பித்த என்பதனால் வியஷ்டி சிருஷ்டியும்தெரிவிக்கப் பெறுகின்றன.

(ix) போக்தா-போக்கிய சம்பந்தம் : போக்கியப் பொருளை எவன் ஒருவன் தன் விருப்பப்படி அநுபவிக் கின்றானோ அவன் போக்தா, ஈண்டு ஈசுவரன் போகத்தை அதுபவிப்பவன். ஆன்மா ஈசுவரனின் போகப்பொருளாய் இருக்கின்றது.ஆகவே, இதுபோக்தாபோக்கிய உறவாகின்றது.

          வாரிக்கொண்டு உன்னை
              விழுங்குவன் காணில் என்று
          ஆர்வுற்ற என்னை
              யொழியஎன் னில்முன்னம்
          பாரித்து, தான் என்னை
             முற்றப் பருகினான்;
          கார்ஒக்கு காட்கரை
             அப்பன் கடியனே (9.6:10)

        [ஆர்வு-ஆசை பாரித்து-எண்ணி; கடியன்-பதற்ற
        முடையவன்]