பக்கம்:வைணமும் தமிழும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

வைணவமும் தமிழும்


இருப்பவை: (5) 'வாழ்வினையும்' என்பது வீடுபேற்றின் தன்மை என்ற ஐந்துப் பொருள்களைக் (அர்த்த பஞ்சகத்தைக்கூறுவது. யாழின் இசை வேதத்து இயல் என்பது சாமவேத சாரமான திருவாய்மொழி. -

விளக்கம் : சீமந் நாராயணனே அறப்பெரிய முதல்வன்; ஆன்மாவின் இயல்பு அடியேன் என்பது:சரணாகதி இறைவனை அடைவதற்குரிய வழி; “பொய்ந்நின்ற ஞாலமும் பொல்லா அழுக்குடம்பும்” (திருவிருத்-1) ஆகிய இவையே விரோதிகள்: “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதுவே" பரமபுருஷார்த்தம் என்னும் இவ்வைந்து பொருள்களுமே திருவாய்மொழியில் துவலப் பெறுகின்றன என்று நம்முடைய ஆசாரியப் பெருமக்கள் விளக்கியுள்ளனர்.

(1) இறைவனின் இயல்பு : திருவாய்மொழியிலுள்ள 'உயர்வற’(1.1), 'திண்ணன் வீடு' (22), 'அணைவது' (28) 'ஒன்றும் தேவும்' (4.10) என்ற நான்கு திருப்பதிகங்களும் நுவல்வதாக சுட்டிப் போயினர்.

(2) ஆன்மாவின் இயல்பு : திருவாய் மொழியிலுள்ள ‘பயிலும் சுடர்ஒளி' (3,7) எறாளும் இறையோனும் (48) ‘கண்கள் சிவந்து' (88) கருமாணிக்கம் (89) என்ற நான்கு திருப்பதிகங் களிலும் சொல்லப் பெற்றுள்ளதாகக் குறித்துப் போயினர்.

(3) ஆன்மா அடையும் பலன்: திருவாய்மொழியிலுள்ள 'எம்மாவீடு '(29) 'ஒழிவில் காலமெல்லாம்' (33) 'நெடுமாற்கு அடிமை' (810) வேய்மரு (103) என்ற நான்கு திருப்பதிகங் களிலும் சொல்லப்பெற்றுள்ளதாக எடுத்துக் காட்டியுள்ளனர்.