பக்கம்:வைணமும் தமிழும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

வைணவமும் தமிழும்


உள்ளே இருப்பவர்கள் மயங்கினவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; வெளியே எழுப்புபவர்கள் துடிப்பவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அனைவரும் பகவதது பவத்தில் ஈடுபட்டவார்களே என்று கூறுவதில் தட்டில்லை

“சர்வசேஷியான எம்பெருமான் சேஷயூதர் இருக்கு மிடத்திற்கு வந்து அருள் புரியக் கடமையுடையவன்; அவன் அங்ஙனம் செய்யாதொழியில் நாம் நம் சொருபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவன் இருப்பிடத்திற்குச் சென்றுசேவித்தால் அவன் ‘ஆ நம் காரியத்தை நாம் செய்யத் தவறின்ோமே' என்று தான் கழிவிரக்கமுற்று நம் காரியத்தைச் செய்து தலைக்கட்டுவன்; எல்லோருமாகத் திரண்டு போகலாம் வாருங்கள்” என்று அழைக்கின்றனர் (8).

இங்ஙனம் பத்துப் பாசுரங்களால் பத்துப் பெண்களை உணர்த்திய படியைக் கூறியது திருவாய்ப்பாடியிலுள்ள பத்து லட்சம் பெண்களையும் உணர்த்தியதற்கு உபலட்சணமாகும். இவற்றால் ஆன்மாவின் இயல்புகள் சொல்லப்பட்டதை நினைந்து மகிழலாம்.

(iii) ஆன்மா அடையும் பயன்கள் : 'மாலே மணி வண்ணா' (2.6) என்ற இருபத்தாறாம். பாசுரத்தில் ஆயச் சிறுமிகள் கேட்பவையே. ஆன்மா அடையும் பயன்களாகும். அவர்கள் கேட்பவை திருப்பள்ளி எழுச்சிக்குச் சங்குகள் வேண்டும் புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக் கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழிக்க நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி