பக்கம்:வைணமும் தமிழும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

247


கோலவிளக்குகள் வேண்டும்; நெடுந்துரத்தில் எங்கள் திரளைக் கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக் கொண்டு செல்வதற்குக் கொடி வேண்டும்; புறப்பட்டுப் போகும்போது பனி தலைமேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டி வேண்டும்: - சிறிய வயிற்றிலே பெரிய உலகங்கள் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ஒர் ஆலந்தளிரிலே கிடந்து செயற்கரிய காரியங்களைச் செய்யவல்ல உனக்கு இவை எங்கட்குக் கிடைக்கச் செய்வது எளிதான செயலேயாகும்.

“கூடாரை வெல்லும்” (27) என்ற இருபத்தேழாம் பாசுரத்தில் மார்கழி நோன்பு தலைக்கட்டின பிறகு இடைப்பெண்கள் கண்ணனிடம பெறவேண்டிய வெகுமானச் சிறப்புகளெனச் சொல்லுகின்றார்கள். “பாடகம் முதலிய ஆபரணங்களையெல்லாம் உன் கையால் எங்களுக்குப் பூட்ட நாங்கள் அணியப்பெற்றவர்களாகவேண்டும். அங்ஙனமே ஆடைகளையும் நீ உன் கையால் எங்கட்கு உடுத்தி நாங்கள் உடுக்கப் பெற்றவர்களாக வேண்டும்” என்கின்றனர்.

“கறவைகள் பின்சென்று" (28) என்ற இருபத்தெட்டாம் பாசுரத்தில் தெரிவிப்பவை எவை? முன்னர் 'போற்றியாம் வந்தோம்' (21) “செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?" (22) ‘உன்னை அருத்தித்து வந்தோம்(25) என்பன போன்ற பாசுரங்களில் தங்களுக்குள்ள பிராப்பிய ருசியை வெளியிட்டனர். அந்தப் பிராப்பியத்தைப் பெறுகைக்கு உடலாகத் தங்களுடைய ஆகிஞ்சன்னியத்தையும்14


14. ஆகிஞ்சன்னியம்- கன்மஞானபக்திகளாகின்ற மற்ற உபாயங்களில் தொடர்பற்றிருத்தல்.