பக்கம்:வைணமும் தமிழும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

வைணவமும் தமிழும்


உபாயத்துவத்தையும்15 வெளியிடுகின்றனர். இப்பாசுரத்தில் ‘நாயகரே! நின்னருளே புரிந்திருக்கும் எங்கள் பக்கலில் எடுத்துக் - கழிக்கலாம்படியும் சில உபாயங்கள் உளவென்றிருந்தாயோ?, ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்' (23) என்றும் இன்று யாம் வந்தோம் இரங்கு (24) என்றும் நாங்கள் வேண்டிய அருளுக்குப் பிரதிபந்தகங்களாகத் தங்கள் திறத்தில் சாதனாம் ஒன்றும் இல்லை என்ற சர்வஜ்யனுக்கு அறிவிக்கின்றனர்.

‘சிற்றஞ்சிறுகாலே' (29) என்ற இருபத்தொன்பதாம் பாசுரத்தில் தங்கள் குறிக்கோள் கைங்கரியம் என்று பிரபந்தத்தின் தற்பர்யத்தைச் சொல்லி முடிக்கின்றனர். முன்னரெல்லாம் ‘பறை பறை’ என்று சொல்லி வந்த ஆயச்சிறுமிகள் அப்பறையின் பொருளைத் தீர்மானித்து விண்ணப்பம் செய்த பாசுரம் இது. “நாட்டார் இசைவு பெறுவதற்காக 'நோன்பு' என்ற ஒன்றைக் காரணமாகக் கொண்டு இங்கு வந்தோமேயன்றி எங்களது குறிக்கோள் உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் புரிவதுதான்; இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிந்திருக்க விருப்பம் எமக்குப் பிறவாவண்ணம் நீயே அருள்புரிய வேண்டும்” என்கின்றனர்.

எம்பெருமானுடைய பிறவிதோறும் ஒக்கப்பிறக்கும் பிராட்டியைப்போல தாங்களும் ஒக்கப் பிறந்து ஆட்செய்ய நினைக்கின்றனர். ஆழ்வார்கள் எல்லோரும் “இனிப்பிறவியான் வேண்டேன்” என்றும், “ஆதலால் பிறவிவேண்டேன்’ (திருமாலை-3) என்றும் கூறி பகவானிடம் வேண்டியது


15. உபாயத்துவம்-சித்தோபாயம்.