பக்கம்:வைணமும் தமிழும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

249


பிறப்பறுக்கவே வேண்டும் என்று. ஆண்டாள் அங்கனமே பேசாமல் “எற்றைக்கும். ஏழேழ் பிறவிக்கும்” என்றமையாலே அவனுடைய அவதாரங்கள்தோறும் கூடவே வந்து பிறக்கின்ற நாச்சிமார்களிலே "இவள் ஒருத்தி” என்னும் இடம் தெரிவிக்கப்பட்டதாகின்றது.

“வங்கக் கடல் கடைந்த” (30) என்ற முப்பதாம் பாசுரத்தில் இப்பிரபந்தம் கற்றார் பிராட்டியாராலும், எம்பெருமானாலும் எல்லாக் காலங்களிலும் அங்கீகரிக்கப் பெறுவார்கள் என்கின்றாள்.

‘சங்கத் தமிழ் மாலை’ - பஞ்ச லட்சம் குடிப்பெண்கள் திரள் திரளாக அநுபவித்தது போல், பக்த பாகவதர்கள் திரள் திரளாக அநுபவிக்க வேண்டும் என்பது தாற்பரியம்.

திருவாய்ப்பாடியில் பெண்களுக்குக் கிருட்டிணன் சமகாலத்தவனாகையால் கிருட்டிணனை அவர்கள் நேரில் காண முடிந்தது. அந்த நேர்காட்சியை ஆண்டாள். நாச்சியார் பாவனை செய்து பெற்றார். அவளிலும் பிற்பட்ட நம்போலியர் அப்பேறு பெற வேண்டில் இப்பிரபந்தத்தை ஒதினால் போதும். “கன்றிழந்த தலைநாகு தோற் கன்றை மடுக்க அதுக்கு இரங்குமாப்போலே, ஆய்ச்சியர் சொன்ன இப் பாசுரங்கொண்டு பலிக்கும்” என்பர் பட்டர்

அதிகாலையில் எழுந்து'முப்பது பாட்டையும் தப்பாமல் - ஒரு பாட்டும் நழுவாமல் அநுசந்திக்க வேண்டும். அதனைச் செய்ய முடியாவிட்டால் “சிற்றஞ்சிற்காலே" (29) என்ற பாசுரத்தை அநுசந்தித்தால் போதும். அதையும் செய்ய முடியாமற் போனால் “நாம் இருந்த இருப்பை நினைப்பது"