பக்கம்:வைணமும் தமிழும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

வைணவமும் தமிழும்


என்பர் பட்டர்."நாம் (பட்டர்) இப்பிரபந்தத்தை அநுசந்தித்து ஈடுபட்டிருந்த இருப்பை” என்றபடி

(iv) பயனை அடையும் வழிகள்:'ஏற்றக்கலங்கள்' (21) என்னும் இருபத்தொன்றாம் பாசுரத்தில் “ஆற்றப் படைத்தான் மகனே!” என்று கண்ணனை விளிக்கின்றனர். ஆய்ச்சியர் பலகாலும் கண்ணனை விளிக்கும்போது ‘நந்தகோபலன் மகனே! என்றுவிளிப்பதைப் பாசுரங்களில் காணலாம்.இதற்கு ஒரு கருத்து உண்டு. அது யாதெனில்: “பரமபதத்தின் இருப்பைத் தவிர்த்தும், பனிக்கடலில் பள்ளிக் கோளைப் பழகவிட்டும்’ (பெரியாழ் திரு. 5.3:9) 'நீ இந்த திருவாய்ப்பாடியில் நந்தகோபர்க்கு மகனாகப் பிறந்தது இங்ஙனம் கிடந்து உறங்கவோ? எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ நீ அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்தில் பிறந்தது? (திருப்28) ஆகவே, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ?' என்பதாகும். 'மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடி பணியுமாப்போலே, யாம் வந்தோம்'. 'ஆற்றாது வந்து இராமன் பிராட்டி விஷயத்தில் அபசாரப்பட்டக் காக்காசுரன் மீது நான்முகன் கணையைத் தொடுத்துவிட அது எத்திசையும் உழன்றோடி எங்கும் புகலற்று இளைத்து விழுந்த காகம் போல வந்து' என்றபடி

‘யாம் வந்தோம்’- சத்துருக்கள் உன்னுடைய அம்புக்குத் தோற்று அவ் அம்பு பிடரியைப் பிடித்துத் தள்ள அவர்கள் வருமாறுபோல, நாங்கள் உன்னுடைய சவுந்தரிய செளசீல்யாதி குணங்கள் பிடித்திழுக்க வந்தோம் - உன்திருவடியை நோக்கி வந்தோம். இதில் 'சரணாகதி' குறிப்பிட்டபடி