பக்கம்:வைணமும் தமிழும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

251


'அங்கண்மாஞாலத்து' (22) என்ற இருபத்து இரண்டாம் பாசுரத்தில் “பேரரசர்கள் நின்சீரிய சிங்காதனத்தின்கீழ் திரண்டு வந்து கிடப்பதைப்போல் நாங்கள் வந்து தலைப்பெய்தோம் - கிட்டினோம். 'திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்.’ “நின் திருக்கண்கள் இரண்டிலும் கடாட்சிக்க வேண்டும். அநந்யார்ஹைகளாக16 வந்து நின்ற எங்களை" என்கின்றனர். இதிலும் பிரபத்திக் - குறிப்பைக் காணலாம்.

‘மாரிமழைமுழைஞ்சில்'(23) என்ற இருபத்து மூன்றாம் பாசுரத்தில் கண்ணபிரான் திருப்பள்ளியிலிருந்து எழுந்து “சீரியசிங்கம் போல் புறப்பட்டு எழுந்தருளி நடையழகு காட்டிச் சிங்காதனத்தின்மீது வீற்றிருந்து தங்களின்.(ஆயச்சிறுமியரின்) வேண்டுகோளை ஆராய்ந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

‘அறிவுற்று’ என்பதால் அடியோடு அறிவில்லாததொரு பொருளுக்குஅறிவு குடிபுகுந்தமை தோன்றும். சிங்கம் பேடையைக் கட்டிக்கொண்டு உறங்கும்போது அறிவிழந் திருக்கும். கண்ணபிரானும் 'நப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்ப னாதலால் (திருப் 19) அடியார் காரியத்தைச் செய்ய நினைத்து உணர்வதற்கு முன்னர் அறிவற்றதொரு பொருளாகவன்றோ தன்னால் எண்ணப் ‘படுவன் போலும்! யாம் வந்த கர்ரியம் : இப்போது இவர்கள் வந்த காரியம் இயம்பவில்லை; காரணம் சொல்லிவிட்டால் சுதந்திரனாகிய இவன் மறுத்தாலும் மறுக்கக் கூடுமென்று அஞ்சி, சற்றுத் தாமதித்து விண்ணப்பம் செய்கின்றனர் ‘சிற்றஞ்சிறுகாலே' (29) என்ற பாசுரத்தில்


16. அநந் யார் ஹைகள்-மற்றவருக்கு இல்லாமல் ஈசுவரனுக்கே உரித்தாயிருக்கும் நாங்கள்.