பக்கம்:வைணமும் தமிழும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

255


விட்டு ஒன்று பிரிந்திரா என்கின்ற தத்துவத்தை நினை வூட்டுவதாக அமைகின்றது.

'உந்து மத களிற்றன்' (18) என்ற பதினெட்டாம் பாசுரத்தில் கண்னாபிரானின் திவ்விய மகிஷியான நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகின்றனர். கிருட்டினா வதாரத்தில் நப்பின்னைப் பிராட்டியே பிரதான மகிஷியாகக் குலாவப்படுகின்றது. ஆழ்வார் பாசுரங்களில் உருக்குமினிப் பிராட்டியைப்பற்றி மூன்று நான்கு இடங்களில் மட்டிலுமே உள்ளது; நப்பின்னைப்பற்றிய குறிப்பு பல நூறு இடங்களில் வருகின்றது. நப்பின்னை கும்பர் என்பாரின் மகள், ‘கும்பர் திருமகளாரே’ என்று அழைக்காமல் ‘நந்த கோபாலன் மருமகளே' என்று அழைத்தமைக்குக் காரணம் என்ன? பெண்டிர்க்குப் பிறந்தகத்து சம்பந்தத்தைக் காட்டிலும் புக்ககத்துச் சம்பந்தமே பெருமையு.ை யதாயிருக்கும் என்பதால்,

‘குத்து விளக்கெரிய' (19) என்ற பத்தொன்பதாம் பாசுரத்தில் நப்பின்னை கண்ணன் என்ற திவ்விய தம்பதிகளின் காலிலும் விழுந்து இரக்கின்றனர் ஆயச்சிறுமிகள். கதவுத் துளை வாயிலாக இருவரும் காணப்படுகின்றனர். ஆகவே வெளியிலிருந்து கொண்டே பிரபத்தி நடைபெறுகின்றது. இது பிரபத்தியைத் தெளிவாக்குகின்றது.

இங்கு ‘மெத்தென்ற பஞ்சசயனம்’: மென்மை, குளிர்ச்சி, நறுமணம், வெண்மை, விரிவு என்ற வகைச் சிறப்புகள் பொருந்திய படுக்கைக்குப் பஞ்ச சயனம்’ 577று பெயர். இந்த ஐவகையில் மெத்தென்றிருத்தல் சேர்ந்திருந்தாலும் தனிப்பட ‘மெத்தென்ற' என்று சிறப்பித்தற்குக் காரணம் அதன்