பக்கம்:வைணமும் தமிழும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

வைணவமும் தமிழும்


முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காக மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் என்ற பாசுரத்தால் தெரிவிக்கப் பெற்ற 'அர்த்தபஞ்சகமே' இங்குமெத்தென்ற பஞ்சசயனமாகக் கருதப்பெற்றதாகவும் கொள்ளலாம். இந்தப் பஞ்ச சயனம் சாத்திரங்களால் தாங்க பெறுகின்றது என்பதைக் கோட்டுக் கால் கட்டில்’ என்ற தொடர் குறிப்பிடுகின்றது.

‘முப்பத்துமூவர்'(20) என்ற இருபதாம் பாசுரத்திலும் கண்ணபிரான் நப்பின்னைப்பிராட்டி என்ற இருவரையும் எழுப்புகின்றனர். இதற்கு முன்னுள்ள பாசுரத்தில் கண்ண பிரானுடைய சிருங்கார ரசவிதக்னாயிருக்கும் தன்மையைச் சொல்லி அநுபவித்தார்கள். இப்பாசுரத்தில் அவனது பெரு மிடுக்கைச் சொல்லி அநுபவிக்கிறார்கள். விசிறியையும், கண்ணாடியையும், உன் மணாளனையும் தந்து நீராட்டுவிக்க வேண்டுமென்று வேண்டுகின்றனர். 'நீராட்டு' என்பதற்குச் சேர்ப்பி என்பது பொருள். பகவத் சந்நிதியில் கைங்காரியமே புருஷார்த்தம் என்பது காட்டப் பெறுகின்றது.

‘செப்பன்ன மென்முலை' என்று தொடங்கி நப்பின்னைப் பிராட்டியின் உறுப்புகளின் அழகு பேசப்பெறுகின்றது. பூர்வச்னபூஷணத்தில் பிராட்டி 'சேதநனை அருளாலே திருத்தும் ஈசுவரனை அழகாலே திருத்தும்” என்று அருளிச் செய்திருப்பதை ஈண்டு நினைவு கூரலாம்18 ரீவசன பூஷணத்தால் சாதித்தது பெரியபிராட்டியைப் பற்றியே அன்று என்று ஐயுற வேண்டாதபடி 'நப்பின்னை நங்காய் ! திருவே!' என்று அருளிச் செய்யப் பெற்றது. இவளையும் திருவின் அம்சபூதையாகக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பு.


18. ரீவச.பூஷ-14 (புருஷோத்தம நாயுடு பதிப்பு)