பக்கம்:வைணமும் தமிழும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

259


சரணமடைந்து உய்ந்துபோகலாம் என்று குறிப்பிடுவதையும் உணரலாம். இதே ஆழ்வார் பிறிதோர் இடத்தில்,

       அடைக்கலம் புகுந்த என்னை
           ‘அஞ்சல் என்ன வேண்டுமே (திருச்சந்த-92)

என்று அருளிச்செய்துள்ளதையும் உணரலாம்.இதிலும் எம்பெருமான் சித்தோபாயமாகவே கருதப்பெறுகின்றான் என்பதையும் தெளியலாம்.

   திருமங்கையாழ்வாரும்,

        “நள்ளேன் உன்னை யல்லால் -
             நறையூர் நின்ற நம்பியோ” (பெரி. திரு72:1)

என்ற பாசுரஅடியில் சித்தோபாயத்தில் தன் ஊற்றத்தை வெளியிடுகின்றார், இன்னொரு பாசுரத்திலும் இவர்,

          வேங்கடத்து அரியைப் பரிகீறியை
              வெண்ணெய்உண்டு உரலிடை ஆப்புண்ட
          தீங்கரும்பினை, தேனை, நன்பாலினை,
              அன்றி.என்மனம் சிந்தைசெய்யாதே (பெரி திரு. 73:5)

என்று எம்பெருமானையே சித்தோபாயமாகக் கொண்டிருப் பதைக் காணலாம்.

  நம்மாழ்வாரும் ஒரு பாசுரத்தில் இந்த உபாயத்தை,

          பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
              ஆயனை, பொன்சக் கரத்து
          அரியினை அச்சுத னைப்பற்றி யான் இறை
              யேனும் இடரிலனே (திருவாய்,310:4)

      [புள்-கருடன் இறை- சிறிது இடர்-துன்பம்]